Thursday, July 8, 2010

Oru kathasiriyarin kathai - 9

9. மொட்டை மாடி


அடுத்த வாரம் இருவருக்கும் வேகமாக ஓடிகொண்டிருந்தது. இருவருரும் பார்த்துக் கொள்ளாமல் வெள்ளிக்கிழமை வந்தது. அன்றிரவு 8.30 வீடு வந்து சேர்ந்தாள். அவனது ரூம் வெளியே தாளிடிருன்தது. தனது மாடிக்கு சென்று குளித்து கிழிறங்கி சமயலாரிக்கு வந்தாள். மேடையில் casserole உம ஒரு பேப்பரும் இருந்தது. 'உங்க பங்கு மாகி' என்றிருந்தது. காஸ்செரோளை திறந்து பார்த்தாள். காய் சேர்த்த மாகி கொஞ்சம் சூடாக இருந்தது. எடுத்து வைத்துக்கொண்டு சாபிட்டாள். T.V. பார்க்க ஆரம்பித்தாள். திடிரெண்டு மொட்டை மாடி கதவு படாரென்று சாத்திக்கொண்டது. மேலே சென்றாள். கதவை திறந்து கீழிருந்த கல்லை இடுக்கில் வைத்தாள். விளக்கு எரியவில்லை. நன்றாக காற்றடித்துக் கொண்டிருந்தது.

'இங்கிருக்கிங்களா'? என்று கேட்டாள்.

''ம்ம். ஆமாம், good evening ' என்று பதில் வந்தது. அவள் சுற்றிப் பார்த்தாள். அவனை காண வில்லை. ' tank மேல இருக்கேன்' என்று குரல் கொடுத்தான். நிமிர்ந்து பார்த்தாள். 'ஹாய்' என்பது போல கை அசைத்தாள்.

'மாக்கிகு தேங்க்ஸ்' என்றாள். 'நோ ப்ராப்லம், அவன் வந்தான், asusual பசியோட. ஆனா இனிக்கு காய் போட்ட மாகி வேணும் நு அடம்பிடிச்சான், என்ன கடைக்கு தொரத்தி சமைக்க வெச்சான்.' என்றான்.

'ஹஹா நல்ல friend ' என்று சிரித்தாள். 'ம்ம் ஆமாம், என் கதையோட first ரெண்டு chapters முடிஞ்சது, அதோட rough draft பாக்க வர சாக்குல உங்கள பாக்க வந்தான். பாவம் ஏமாந்துடான். இப்போல்லாம் ரொம்ப லேட்டா வரிங்களே' கேட்டான்

'ஐயோ பாவம்' சிரித்தாள் . usuala இது தான் என் டைம். போன வாரம் பஸ் timings தெரியாததுனால permission கேட்டுஓடி வந்திருந்தேன். ஆனா இனிமே இந்த டைம் தான்' பெருமுச்சு விட்டாள்.

'ரொம்ப கஷ்டமல. லேட்டா வந்துட்டு வேல பாக்கறது. கல்யானதக்கப்பறம் இன்னும் கஷ்டம் தான்' என்றான். 'ஆமாம், அப்படியும் வேல செய்யறவங்க இருக்கங்கள். ஆனா நான் வேலைக்கு போக மாட்டேன், கல்யனதுக்கப்பறம்' என்றாள்

'ஏன்?' என கேட்டக நினைத்தான் அனால் கேட்கவில்லை. அவளே தொடர்ந்தாள் 'என் அம்மா, நான் கொஞ்சம் வளந்த பெறகு தான் வேலைக்கு போன்னாங்க, சோ நானும் அது போல தான் இருப்பேன். ஆனா அவங்க சும்மா இல்லே, தன்ன தானே update பண்ணிகிட்டாங்க. எனக்கு எங்கம்மா தான் ஆஸ்தான தைலோர், இன்னி வரைக்கும். இபோ அவங்களே ஒரு boutique வச்சிருக்காங்க. நமக்கு தெறம இருந்தா எப்போ வேண்ணா வேல பாக்கலாம். நானும் அப்படி இருக்க போறேன்' என்று முடித்தாள்.

நீங்க எப்படி உங்கள அப்டேட் பண்ணிக்க போறீங்க?' கேட்டான்.

எனக்கு archealogy ல இண்டேறேச்ட். சோ கல்யானதுக்கப்பரம் அவர நச்சரிச்சு படிக்கலாம் நு இருக்கேன்' என்றாள்

சில நிமிடங்கள் பதிலேதும் வரவில்லை. ' ஹலோ துங்கிடின்களா?' கேட்டாள். 'இல்லே உங்கள் archealogist அ imagine பண்ணி பாத்தேன்' என்றான் சிரிப்புடன். 'அப்பறம், எப்படி இருந்தேன்?' கேட்டாள்

'துப்பாக்கியும் மீசையும் இல்லாத வேட்டைகார வேம்பு போல இருந்திங்க' சிரித்தான் மீண்டும். அவளும் புன்னகைத்தாள், ' archealogist னா கடப்பாறைய எடுத்துகிட்டு குழில இறங்கறவங்க மட்டும் இல்லே. coins அண்ட் மொழி ஆராய்ச்சிக்கூட செய்யலாம் என்றாள். 'கரெக்ட் தான்' என்றான் சிரிப்பை புன்னகையை மாற்றிக்கொண்டு. 'future அ இவளோ நல்ல பிளான் பன்னிருகிங்க' என்றான். 'ம்ம் ஆமாம் pastla முழுகவும் கூடாது, futurela மிதக்கவும் கூடாது. பாஸ்ட் அ கணக்குல எடுத்துகிட்டு future அ பிளான் பண்ணனும் இன்னிக்குனு எங்கப்பா சொன்ன அட்வைஸ் என்னக்கு. ' முடித்தாள்.

'சூப்பரா சொன்னாரு உங்க அப்பா. ஆனா சண்ட போடு கிட்டு வந்துடிங்க?' கொஞ்சம் கிண்டலாய் கேட்டான். சிறிது மௌனத்திற்கு பிறகு 'Pridenu வந்துடா, அத தானே மொதல satisfy பண்ணனும்' என்றாள். 'ofcourse , self respect இல்லேன எல்லாம் போச்சு' என்று ஆமோதித்தான். 'நீங்களும் அதுக்கு தானே உங்கள அப்டேட் பண்ணிகிடிங்க' கேட்டாள். இவளது முறை அவனை சீண்ட.

அவன் அதிர்ந்தான். 'ராதா மாமி இல்லே, ரேடியோ மாமி' என்றான். ' அப்டேட் பண்ணிகிட்டது நல்ல விஷயம் தான் ஆனா யாரும் வேண்டாங்கறது என்னது?' என்றாள் மீண்டும் கிண்டலாய். 'நான் யாரையும் பாத்து ஓடல, யாரையும் வேண்டாம்னும் சொல்லல, ஆனா ஒரு circle குள்ளே இருந்துடதுனால, இப்போ freea socialise பண்ண முடியல, அவளோதான்' என்றான்.

'யாரையும் பாத்துஓடலே னு சொல்லறிங்க, ஆனா பொண்ணு பாக்க ஒதுக்கிட்டு கடசில மனச மாத்திகிடிங்கல்ல' அவன் அவளை சற்று முறைத்துப்பர்தான். 'மாமி சொன்னாங்க' நிறுத்தினாள். 'என் சம்பந்த பட்ட விஷயம் இல்லே தான், ஆனா அந்த பொண்ணோட ப்ரைடு, கனவு, வெட்கம் எல்லாத்தையும் மிதிசிடிங்க, ஒரு சக பொண்ணா நீங்க பண்ணது பெரிய தப்பா தோணுது' என்றாள்.

'நான் appologise பண்ணேன்' என்றான் மெதுவாக ஆனால் கோவமாக. 'yea, apology' என்றாள் sarcasticaaga. 'பாஸ்ட மாத்தி, ப்யுசர்ல நடக்காம இருக்க நாம்ம ப்ரெசென்ட் ல ட்ரை பண்ணனும்கறதும் எங்கப்பா சொன்னதுதான். ஒ.கே. நாளைக்கு எனக்கு ஆபீஸ் இருக்கு, நான் கெளம்பறேன். குட் நைட் என்று கூறி கிழே சென்றாள்.

அவன் சொல்லவது அறியாமலும் கோவத்தொடும் அமைதியாய் இருந்தான். அவள் தனது ரூம் கதவை சாத்தியது கேட்டது. அவன் அவனை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான்.

Oru kathasiriyarin kathai - 8

8. ஞாயிறு

அவளுக்கு ஞாயிற்றுக் கிழமை பொழுது விடிந்தது - ஒன்பது மணிக்கு. பல் தேய்த்து முகம் அலம்பியும் தூக்கம் கலையவில்லை, கொட்டாவி விட்டுக்கொண்டே கிழிறங்கி வந்தாள். தோட்டத்துப் படியில் அவன் உட்கார்ந்திருப்பதை கண்டு நின்றாள்.


'Good Morning, சீக்கரம் எழுந்துடிங்க Sunday?' என்றாள்.


'Morning, எனக்கு எது sunday monday எல்லாம், deadline , offtime தான்' பதிலளித்தான்.

காபி போட்டாள். இருவரும் குடித்தனர். 'தேங்க்ஸ் காபிக்கு. டெய்லி டிச்டுர்ப் பண்ணறேன்' என்றான்.

'அதெல்லாம் என்னும் இல்லே, எப்படியும் ஒரு ஸ்பூன்ல decoction எறங்காது and again , நீங்க தான் nignt பால் வாங்கி வரிங்க?' என்றாள்.

காபி குடித்து முடித்ததும் அவள் கேட்டாள், 'washing mashine இருக்குனு மாமி சொன்னங்க, எங்கேனு தெரியல' கேட்டாள்

'என் ரூம்ல' பதில் வந்தது. 'இனிக்கு எனக்கு வேணும்' கேட்டாள். அவன் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லவில்லை.

'என்ன, "இதுக்கு தான்னு" யோசிக்கரிங்கள?' கேட்டாள். 'இல்லே, அதான் எல்லாத்துக்கும் solution இருக்கும்னு சொன்னிங்களே, அத தான் யோசிக்கறேன், எங்கே பிக்ஸ் பண்ணறதுன்னு' என்றான்

அவள் பதிலேதும் சொல்லாமல் சின்ன புன்னகையுடன் நின்றிருந்தாள். இரண்டு நிமிடத்திற்கு பிறகு எழுந்தான், மாசினை இழுத்து வந்தான்,
'கொஞ்சம் unconfortable -a தான் இருக்கும்' என்று கூறிவிட்டு, kitchanilirutha plug -il சொருகி, மேலும் இழுத்து தோட்டத்து wash basinil connect செய்தான். அவன் கூறியது போல் wire -ai தூக்கிவிட்டு குனித்து தான் போக வேண்டி இருந்தது. 'thankyou' சொன்னாள்.

'நோ problem ' கூறிவிட்டு, தன் ரூமிற்கு சென்றுவிட்டான். அவள் மாடிக்கு சென்று தன் துணியை எடுத்துக்கொண்டு வந்தாள். நேற்றே வங்கி வந்திருந்த surf -aiyum போட்டாள். machineai on செய்தால். அது ஓடிக்கொண்டிருக்க, வீடு பெருக்கினாள். முதல் ரவுண்டு முடியும் பொது அவளும் முடித்திருந்தாள்.


அவன் வெளியே சென்றதை தோட்டத்திலிருந்து பார்த்தாள். இரண்டாவது roundai போட்டுவிட்டு, தான் வாங்கி வைத்திருந்த மாகியை எடுத்து அடுப்பில் போட்டாள். அது ஆனதும், தட்டில் போட்டுக்கொண்டு, T V முன் ஐக்கியமானாள். சாப்பிட்டு முடித்து எழுந்திருக்க மனமில்லாமல், அப்படியே T V பார்த்க்கொண்டிருந்தாள். மணி 12 ஆகும் போது அவன் வந்தான். கையில் பேப்பர் bundle. கதவை சாதிக்கொண்டான். அவள் அவன் கதவை சில வினாடிகள் பார்த்துவிட்டு தன் கவனத்தை, T V இல் செலுத்தினாள். அதற்குள், machine அழைக்கவே, சென்று அதை நிறுத்திவிட்டு துணிகளை உலர்த்தினால் , machineai , தள்ளி wash basin பக்கத்தில் வைத்தாள். திரும்பவும் வயறு பசிக்கவே, என்ன சமையல் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள். மாடியில் அவள் மொபைல் அலறவே ஓடி சென்று அதை எடுத்தாள்.

'சொல்லுமா' என்றாள்
'என்ன பண்ணறே?' அம்மா கேட்டாள்
'அத தான்யோசிசிகிடு இருக்கேன்' சிரித்தால்
'துணி தொசிடிய?'
'ம்ம் இபோ தான் ஆச்சு. லஞ்ச் தான் என்ன பண்ணறதுன்னு தெரியல'
'இங்கே வரியா? உனக்கு என்ன வேணும்னு சொல்லு;' கணிவாகக்கேட்டல்
'வரலாம் தான் ஆனா அங்கே வந்தேன்னா, திரும்ப இங்கே வர மனசு வராதே. காலைல எழுந்தா உன் கையால காபி, குளிச்சிட்டு வந்த டிபன் ரெடி சாயங்காலம் விட்டுக்கு வந்தாலும் அதே routine , நிம்மதியா இருந்தேன், ஆனா இங்கே எல்லாம் நானே பண்ண வேண்டிருக்கு அதன் அங்கே வந்த இங்கே வர பிடிக்காது. அப்பாவும் எதாவது வாய கிளருவாறு' சிணுங்கினாள்
'நீ செய்யறது அப்படி. ஆனா இபோவவது உனக்கு புரியும்ல உங்கள கேளப்ப நான் எவ்வளோ பாடு படறேன் நு. நல்லது தான் நீ தனிய பொன்னது ஆனா அடுத்தவாரம் சண்டே இங்கே வந்துடு'
'அம்மா பேசாம இப்போ அப்படியே துங்கிட்டு evening போய் எதாவது சாட் item சாப்டலாம் நு இருக்கேன். சூப்பர் ஐடியா ல' என்றாள் கொஞ்சம் மகிழ்ச்சியாக.
'என்னடி இப்படி. next time உன்னை பாக்கும் போது noodles மாதிரி தான் இருப்பே போலிருக்கே' என்றாள் அம்மா கொஞ்சம் கவலையாக
விடுமா இனிக்கு ஒரு நாள் தான் இப்படி. வீக் டயஸ் ல ஒழுங்க தான் சாப்டறேன் சோ டோன்ட் வோர்ருய்' என்றாள்
'என்னவோ பண்ணு. ஆனா முடியாத பக்ஷத்துல இங்கே வந்துடு' என்றாள் அம்மா
'கண்டிப்பா மா இப்போ, தூங்க போறேன். டாட்டா' என்று கூறி விடை பெற்றாள்.

அங்கே அப்பா, -

'என்ன உன் பொண்ணு இனிக்கு வரலாமா?' கேட்டார்

'இல்லையாம்' மெதுவாகக்க் கூறினாள் அம்மா

'அப்போ இனிக்கும் ரசமும் மோரும் தானா?' வெறுப்பாக கேட்டார்

'அவ அங்கே அது கூட இல்லாம இருக்கா, நாம எப்படி விதவிதமா சாப்டறது?'

'அது அவ தப்பு, அப்பளம் கூட இல்லாம என்ன சண்டே. நீ அவளுக்காக பத்தியம் இரு. நான் என் இருக்கணும்?' என்று குதித்தார்.

'எனக்கு கம்பெனி' என்று அமைதியாக கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள் அம்மா

இங்கே இவள், பானி பூரியும் சன்னா மசாலாவும் நினைத்தபடியே தூங்க ஆரம்பித்தாள்

Thursday, June 24, 2010

OKK - 7

7. பெயர் 

சுரேஷ் வாசலை நோக்கி 5வது முறையாக பார்த்தான்.

'என்னடா சும்மா சும்மா வாட்சையும்  வாசலையும் மாத்தி மாத்தி பார்த்துகிட்டே இருக்கே? உன்னோட co-tenant வர நேரமா?' சுரேஷின் மண்டையில் அடித்தான் பிரகாஷ்.  'ஆமான்டா' மண்டையை தேய்த்தபடியே பதிலளித்தான் சுரேஷ். 

'அதுக்கு ஏன்டா இவ்வளோ டென்ஷன் ஆகற.  சரி, எனக்கு பசிக்குது, போய் maggie கொண்டு வா' அதட்டினான் பிரகாஷ்.

'நீயே போய் செஞ்சுக்கோ' கூறிவிட்டு சோபாவில் சாய்ந்து கொண்டான் சுரேஷ்.  'டேய் நான் உன் guest டா.  நீ போய் செஞ்சு கொண்டு வா.  பசி தாங்கல.  சமையலறைக்குள் சுரேஷ்ஐ தள்ளி விட்டு சோபாவில் தொப்பென்று விழுந்து T.V.ஐ அன் செய்தான்.
வாசல்  கதவு  திறக்கும்  சத்தம்  கேட்டு  திரும்பிப் பார்த்தான். அவள் உள்ளே நுழைந்து கதவை தாளிட்டாள்.  பிரகாஷை பார்த்ததும் அப்படியே நின்றால்.  உட்கார்ந்திருந்த அவன் மெதுவே எழுந்தான். 
சில விநாடி தயகத்திற்கு பின், 'ஹலோ, ஐ அம பிரகாஷ். சுரேஷோட  friend ' .   'ஹலோ. நான் மாடில குடி இருக்கேன்.  இங்கே co-tenant.' என்று தன்னை அறிமுகப்படுதிக் கொண்டாள். 

'நான் அவன் கதையோட publishing details பத்தி பேச வந்தேன்.' அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் விழித்தான்.  'oh ! sorry for the disturbance . you continue . நான் மாடில தான் இருப்பேன்.  disturb பண்ண மாடேன்.' என்றாள். 'நோ,நோ disturbance ஒன்னும் இல்லே. எங்க discussion ஓவர். ஜஸ்ட் அவன சமைக்க சொல்லி வேல வாங்கிடுருந்தேன்.   நீங்களும் வாங்களேன் சாப்படலாம்.' அவளை அழைத்தான் பிரகாஷ்.
'இல்லே இருக்கட்டும். பரவா இல்லே. Thank you. நான்  ரூமுக்கு  போறேன் ' கூறிவிட்டு  படி  ஏறினாள்.  'அன்னிகோடா தோசைக்கு compensationnu நெனச்சிகொங்க' சொல்லிக்கொண்டே சுரேஷ் வந்தான்.

'ஹாய். உம.. ஓகே.. டென் minutes ல   வரேன். நீங்க வெயிட் பண்ண வேண்டாம்' சொல்லி விட்டு தனது ரூமிற்கு ஓடி கதவை சாதினாள்.
அவள் தலை மறைந்ததும், பிரகாஷ் சுரேஷை முற்றுகை இட்டான்.  'டேய், கோ-டெனன்ட் நு சொன்னியே, பொண்ணு நு சொன்னியாட?' காரமாய் கேட்டான். 'உனக்கு எதுக்கு சொல்லணும். Just a co-டெனன்ட், அவ்வளோ தானே.' தட்டை எடுத்துக்கொண்டே பதிலளித்தான் சுரேஷ்.

'ஒரு பொண்ணுடா. சரி விடு.  பேரு என்ன சொல்லு' கேட்டான் பிரகாஷ். 'தெரியாது' பதில் வந்தது. அவனை முறைத்துவிட்டு 'கடவுள், தேவ இல்லாதவங்களுக்கு தான் எல்லாமே தருவான்' என்று புலம்பிவிட்டு, 'நீ ஒன்னும் சப்டவேண்டாம். கொண்ட இங்கே.' என அவன் தட்டையும் பிரகாஷே பிடுங்கி கொண்டு maggie - ஐ விழுங்க ஆரம்பித்தான். 

மாடியிலிருந்து அவள் வந்தாள்.  சுரேஷிற்கு நன்றி கூறிவிட்டு தனது தட்டை எடுத்துக்கொண்டாள். 'நீங்க சாப்படல?' சுரேஷை கேட்டாள். 'நான் சாப்டா  அவன் சாப்டா மாதிரி தான். இல்லேடா' பிரகாஷ் பதிலளித்தான். அவள் புன்னகைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

'நான் எனக்கு செஞ்சிகப்போறேன். யாருக்காவது இன்னும் வேனுமா?' கேட்டான் சுரேஷ். இருவரும் வேண்டாம் என்று தலை ஆட்டினர்.  அவன் மீண்டும் சமையலறைக்குள் சென்றான்.  பிரகாஷ் அவளை நோக்கி 'இங்கே உக்காந்துக்கொங்க' என்று அவன் எழுந்து கொண்டு சோபாவை காட்டினான்.  அவள் அமர்ந்ததும் அருகில் இருந்த சாரில் அமர்ந்தான்.

'என் பேர் பிரகாஷ்.  அவனோட எடிட்டர் avum   இருக்கேன்.' என்றான் மீண்டும்.  அவள் சிரித்து விடு 'என் பேரு ..' என்று சொல்லும் போது பிரகாஷ் பலமாகத் தும்பினான்.  காதலி தீடிவைத்து அவள் பெயரை கேட்க காத்துக் கொண்டிருந்த சுறேஷிருக்கு ஒன்றும் கேட்கவில்லை.  பிரகாஷை நன்றாக கறித்தான்.
'I am sorry.  Excuse me' பிரகாஷ் கைகுட்டையால் வாயை மூடினான். ' Thats ok' என்றாள்.  'முகஸ்துதிக்கு சொல்லலே, ஆனா உங்களுக்கு ஏத்த  பேரு.' என்றான் பிரகாஷ்.  'Oh! I am flattered.' என்று அவள் பதிலுக்கு புன்னகைத்தாள். அவர்கள் இருவரும் புன்னகைப்பதை பார்த்துக்கொண்டே சுரேஷ் வெளியே வந்தான்.

'தேங்க்ஸ் maggieku '     என்றாள் அவனைப்பார்த்து. 'இல்லே, அண்ணியோட தோசைக்கு compensation தான்' என்றான். ' அன்னிகப்பரம் உங்கள பாக்கள. மூணு  நாள் ஆச்சுனு நெனைக்கறேன்' என்றாள்.

'ஆமா என்னோட அடுத்த கதைக்கு பிளாட் யோசிசிட்டு இருக்கேன். பஸ்-ஸ்டாண்ட்ல தான் உக்காந்து யோசிப்பேன்.  அங்கே ஏதாவது inspiration கெடைக்கும். உங்கள கூட ஒரு நாள் பாத்தேன்.' என்றான்.

'ஒ அப்படியா. பிளாட் ஏதும் கெடச்சுதா?' கேட்டாள். 'க்ரைம்  நோவேல் எழுதலாம்னு இருக்கேன். எனக்கு அது கொஞ்சம் கஷ்டம். so எனக்கு நானே challenge எடுத்துருக்கேன் இந்ததடவ.' என்றான். 'உன்னக்கு மட்டுமா கஷ்டம். நீ எழுதறத படிக்கற என்னக்கும் தான் கஷ்டம்' என்றான் பிரகாஷ். அவள் மிகவும் சிறியதாக புன்னகைத்தாள். 

'சரி, நான் கெளம்பறேன்.  உன்னோட புக், பைனல் எடிட்டிங் வேல முடிஞ்சி அடுத்த மாசம் புப்ளிஷ் ஆகிடும். நீ எழுத போற க்ரைம விட இது நல்லாவே இருக்கும்' என்று அவனிடம் கூறிவிட்டு, 'நைஸ் மீட்டிங் யு' என இவளிடம் சிரித்துவிட்டு, தனது கார்டை கொடுத்துவிட்டு,  கிளம்பினான் பிரகாஷ்.

அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்தான் சுரேஷ். 'என்னங்க உங்க பிரண்டு நீங்க எழுத ஆரம்பிகரதுகு முன்னவே இப்படி சொல்லறாங்க?' அவனிடம் கேட்டாள்.  'ஒம்போது வருஷமா கூட குப்ப கொட்டரானே.' பதிலளித்தான். 'நீங்க எழுதின புக்ஸ் படிச்சிருக்கேன்' என்றாள். 'ஒ தேங்க்ஸ். பிடிச்சிருந்துதா?' கேட்டான். 'ம்ம் ஆனா உங்க ஸ்டோரீஸ் ல எப்பவும் லேடீஸ் stronga இருப்பாங்க.யார் influence ?' சிரித்தாள்.  

'வேற யாரு, எங்க அம்மா தான்.  பக்கதிலேந்து  பாத்திருக்கேன்ல. என்ன கேட்ட எல்லா லேடிசும் ஸ்ட்ராங்  தான் மென்டலி. அவங்க அப்படி இருக்கறதால தான் குடும்பம் குடும்பமா இருக்கும்.  என்ன பொருத்தவரைக்கும், அப்பாக்கள் பசங்களுக்கு செல்லம் கொடுக்க அம்மா நல்லபடியா வளக்க.  கரெக்டா?' கேட்டான்.

அவள் அப்படியே அவனை பார்த்தாள். இருவரும் இல்லாத இளைய வயதில் இவன் எப்படி கஷ்டப்படிருப்பன் என்று நினைத்தாள்.  ஆனால் கூற முடியவில்லை. 'என்ன மதர் காம்ப்ளெக்ஸ் நு நைகரிங்கள நினைகரிங்களா? நீங்க என்ன நெனச்சாலும் சரி.  என்னோட heroines எல்லோரும் என்னோட அம்மாவோட பிரதி பிம்பங்கள் தான்.' என்றான்.

'அது இல்லே. உங்களுக்கு உங்க அம்மா மேல எவ்வளோ affection நு நெனச்சேன்.' என்றாள். அவன் வெறுமையான சிரிப்பை அவளிடம் உதிர்த்தான். 

'சரி, நான் தூங்க போறேன்.  அவன்குட கொஞ்ச நேரம் பேசினா கூட மோல மூளை காஞ்சி போய்டும்.  தலைய சாப்டுடுவான்.  Good night. நீங்க தூங்கல?' கேட்டான்.
'இல்லே, நாளைக்கு சண்டே ல.  கொஞ்ச நேரம் T.V. பாத்துட்டு அப்பறம் தான் தூங்கப்போறேன்.' என்றாள்.'O.K. Good night then' என்று  விடை  பெற்றுக் கொண்டு, தனது ரூமிற்கு சென்று தாளிட்டான். 

சடாரென்று, தனது மொபைலை  எடுத்து பிரகாஷின் எண்ணை அழுத்தினான், அவன் எடுத்தும், 'டேய், பேரென்னடா?' கேட்டான்.  மறுமுனையில் பலமான சிரிப்பு அடங்கிய பின்னர், 'நீ போன் பண்ணுவேன்னு தெரியுன்டா.   பேர் சொல்ல முடியாது.  அவங்களே சொல்லலேனா, நா ஏன் சொல்லணும்? உன்னக்கு நல்ல வேணும்டா. ஆனா ஒரு க்ளு தரேன்.  அவங்களுக்கு ஏத்த பேரு தான்' என்று சொல்லி திரும்ப சிரித்துவிட்டு வைத்தான் பிரகாஷ்.

சுரேஷ் யோசித்துக்கொண்டே படுத்தான்.  'அழகினு இருக்காது. அவளோ அழகு நு சொல்லமுடியாது. அப்போ என்ன பேரா இருக்கும்?' என யோசித்துக்கொண்டே எப்போது  தூங்கினோம் என்று தெரியாமலே தூங்கி போனான் சுரேஷ்

Monday, June 21, 2010

Oru kathasiriyarin kathai - 6

6. மன்னிப்பு

சுரேஷ் கண் விழித்து படுகையில் எழுந்து உட்கார்ந்தான்.  மேலே மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தான். மணி பத்தை தாண்டி இருந்தது.  எழுந்து பல் தேய்த்து குளித்து வெளியே வந்தான். ரூம் கதவில் எதோ ஓட்டப்படிருந்ததை பார்த்தான்.

'Good Morning. இன்னிக்கு எவனிங் 7 O'clock பூட்டு மாத வர சொல்லறேன்.  அதுக்கு முன்னாடி நான் வந்திடறேன். சுப்போசே நான் வரதுக்குள்ள அந்த ஆள் வந்துடங்கன்ன, கொஞ்சம் பாத்க்கொங்க ப்ளீஸ். தேங்க்ஸ் இன் அட்வான்ஸ் '  - மாடி போர்சன்
என்று எழுதியிருந்தது.  கதவிலிருந்து அதை கிழித்து கசக்கி போடன்.  சமையலறைக்குள் நுழைந்தான். காபி இருந்தது.  கலந்து கொண்டான்.  மீதி பாலை fridgeil வைத்தான்.  T.V. ஆன் செய்து விட்டு சோபாவில் உட்கார்ந்து சன்னலை மாற்ற ஆரம்பித்தான்.

சற்று நேரம் கழித்து கதவை பூடிகொண்டு வெளியே சென்றான்.  சிறிது நேரம் கழித்து அப்படியே நடந்து பொய் கொண்டிருந்தான்.  பின்னர் ஒரு பஸ்-ஸ்டாப் பெஞ்சில் உட்கார்ந்து தனது அடுத்த கதையின் கருவை உருவாக்க யோசிக்க ஆரம்பித்தான்.  தான் தற்பொழுது எழுதிய 'அபிமானி' ஒரு காதல் கதை என்பதால், க்ரைம் நாவலை எழுத நினைத்தான்.  நேரம் ஓடிக்கொண்டு போனது.  திடிரென்று வயறு சங்கொலி எழுப்பவே, தான் எப்பொழுதும் செல்லும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வீடு திரும்பினான்.  ஆகஸ்டு வெயில் மண்டையை பிளக்கவே,படுத்தான்.

மணி நான்கு அடிக்கும் போது எழுந்தான்.  தனது அறையை சுற்றிப்பர்தான். சுதாம் செய்யும் நேரம் வந்து விட்டது என அது அறிவித்தது.  தனது computeril இருந்து ஆரம்பித்தான்.  பின்னர் புக்-செல்ப் ஐ சரி செய்தான்.  படுக்கையை உதறிப் போடான்.  ஜன்னலின் ஸ்க்ரீன் மிகவும்அழுக்காய் இருந்ததால், கழற்றினான்.  நாளை துவைபதற்காக எடுத்து வைத்திருந்த தனது துணிகளுடன் அதனை சேர்த்தான்.  குப்பையை பெருக்கி அள்ளி தோட்டத்தில் கொண்டு போட்டான்.  அங்கேயே முகம் கை-கால் கழுவிக்கொண்டான். காற்று அருமையாக விசியதால், சிறிது நேரம் அங்கே இருந்த துணி துவைக்கும் கல் மேல் அமர்ந்தான். 

தோட்டத்தை சுற்றிப்பர்தான்.  அத்தனை சுத்தமாக இல்லை இருந்தாலும் ஓரளவுக்கு குப்பை அகற்றப்படிருந்தது.  துளசி மாடத்தில் சிறிய துளசி கன்று புது வரவாகத் தெரிந்தது. அப்படியேஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.

வாசல் கதவு திறக்கும் சத்தம் கேடு எட்டிப் பார்த்தான்.  அவள் உள்ளே நுழைந்தாள்.  அப்பொழுதுதான், பொழுது சாய்ந்ததை கவனித்தான்.  ஆனாலும் இன்னும் சூரியன் அஸ்தமனம் ஆகவில்லை.  மணி என்ன என்று ஹாலில் சென்று பார்த்தான்.  ஆறறை ஆகியிருந்தது. 

மாடியிலிருந்து அவள் 'தப தப'என்று ஓடி வந்தாள். திரும்பி பார்த்தான்.  பிரெஷ் ஆகி வேறு சுடிதாரில் இருந்தாள்.  இவனை பார்த்ததும், நின்று, 'நான் பொய் அவங்களை கூடிடுவரேன்' என்றாள். 

'ம்ம்' என்று இவனது பத்தி வருவதற்குள் கதவிடம் சென்றிருந்தாள்.  பாத்து நிமிடம் கழித்து வந்தாள் - கூட ஒரு ஆள்.  அவன், கதவிலிருந்து பூட்டை கழட்ற ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்கெல்லாம், புது பூட்டு மாற்றப்பட்டது.  அவன் பைசாவை வாங்கி கொண்டு கிளம்பினான்.  இதில் எதிலும் சுரேஷ் பங்கேற்கவில்லை.

'இந்தாங்க உங்க சாவி' என்று T.V.  பார்த்துக் கொண்டிருந்த சுரேஷிடம்  கொடுத்தாள்.  அதை வாங்கிக் கொண்டு அவளை பார்த்தான்.  அவள் முகத்தில் கோவம் குடி கொண்டிருந்தது. 

'நீங்க இல்லேனா பதுக சொன்னிங்க.  நீங்க இருந்ததால, நான் disturb பண்ணல .  நீங்க கேட்டிருந்த வந்திருப்பேன்' என்றான்.  அவள் சிறு நொடி தாமதித்து, ' கூப்டிருக்கலம் தான் சார், நீங்களா வருவிங்கன்னு நெனச்சேன்' என்றாள்.

'சார் ஆ?' என்றான்.

'சுரேஷ் நு கூப்படலாம்    ஆனா அப்போ நீங்க என் பேர கூப்படனும் அதுக்கு நான் என் பேர சொல்லணும். நீங்க எனக்கு தேவையல்லாத விஷயம் நு சொல்லுவிங்க. எதுக்கு தேவையல்லாத மன கசப்பு' என்றாள்.

மிக செலாக புன்னகைதான்.  பின் அவளிடம், 'சாரி, அன்னிக்கு மாமி சுட்டேன் ஆ, வந்து நீங்க இங்கே தங்கணும் நு சொன்னதால தான் அப்படி பேசிட்டேன். சாரி என்றான்'

என்ன டைம் ஆனாலும் சரி அம்மாவுக்கு கால் பண்ணனும் என்று நினைத்துக்கொண்டாள். 

'actuala, மாமி உங்களுக்கு ஒரு வாரமா ட்ரை பண்ணிட்டு தான் இருந்தாங்க.  ஆனா உங்க மொபைல் 'not reachable ' நு வந்திடுருன்தது' பதிலளித்தாள்.

அப்போது தான், தட்னது மொபைல் பற்றி அவனுது ஞாபகம் வந்தது.  தனது ரூமிற்குள் சென்று, தனது desk திராவேர்-ஐ திறந்து பார்த்தான். அவனது மொபைல் உரிரற்று இருந்தது.charger -ல் போட்டு விட்டு வெளியே வந்தான்.

எனக்கு கால் பண்ணறவங்க அவ்வலோவ கெடையாது. சோ மொபைல் இருக்குங்கறதே அப்பப்ப மறந்துடுவேன்.  அதுவும் deadline கிட்ட வரும் போது.   மாமி கிட்ட  நாளைக்கு apologise பண்ணனும்.' அவளிடம் கூறினான்.

'சரி, நான் தோசை வாக்க போறேன்'  என்று சமையலறைக்குள் நுழைந்தவள், சட்டென்று திரும்பி மாடிக்கு சென்று pursue உடன் வெளியே கிளம்பினாள்.

'என்னாச்சு?' சுரேஷ் வினவினான்.

'ஒண்ணும் இல்லே, உப்பு வாங்க மறந்துட்டேன், அதான்' என்றாள்.

'ம,  நான் வாங்கி வரேன். ஆனா நான் ரெண்டு தோசை வாத்துக்கட்டா?' கேட்டான்.

'ரெண்டு தானா நானே வாத்து தரேன். இந்தாங்க பைசா' என்றாள்.

அவளை பார்த்துவிட்டு, 'நானும் சம்பதிகறவன் தான்' என்று கூறிவிட்டு தனது purse - ஐ எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.

கடையில் உப்புடன், கண்ணெதிரில் தொங்கிக்கொண்டிருந்த இட்லி மிளகாய் பொடி உடன் வீடு திரும்பினான்.

Wednesday, June 16, 2010

OKK - 5

5. காபி 

சுரேஷ் திடிரென்று எழுந்தான், கடிகாரத்தை பார்த்தன்.  6.45 ஐ காட்டியது.  இன்று deadline என்பதால், இரவு வெகு நேரம் வரை முழித்திருந்தான். இந்நேரத்தில் அவன் எழுந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அவனால் கண் விழிக்காமல் இருக்க முடியவில்லை.  கதவை மெதுவாகத் திறந்து கொண்டு எட்டிப்பார்த்தான்.  சமயரலரையில் நடமாட்டம் தெரிந்தது.  தன்னை எழுப்பியது என்ன என்று புரிந்தது. 

அவள் கையில் சூடாக ஆவி பறக்கும் டம்பளருடன் ஹாலுக்குள் வந்தால்.  இவனை பார்த்துவிட்டு,

'ஒ, முழிசிடின்களா! சாரி டிச்டுர்ப் பண்ணிருந்த என்று சொல்லிவிட்டு தொடதிருக்கு போனால். அங்கிருந்து, 'ம்ம், காபி dicoction இருக்கு. உங்ககுக்காக போடல. ரெண்டு ஸ்பூன் அட்லீஸ்ட் போட தான் ஸ்ட்ரோங்க இருக்கும். உங்களுக்கு வேணும்னா எடுத்துகோங்க' என்றபடி படியில் உட்கார்ந்து தனது காபி யை உரிய ஆரம்பித்தால்.  அவளது டம்பளர் முடிந்ததும் எழுந்து பொய் அதை அலம்பி வைத்துவிட்டு தந்து ரூமிற்கு ஏறினாள்.  அவன் அப்போதும் தனது ரூமின் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.  அவள் மேலே ஏறி போனதும் சமையலறைக்குள் நுழைந்தான்.

' பில்ட்டர் காபி யோட வாசனைக்கு சரணடையாத தமிழன் கிடையாது' என்று நினைத்துக்கொண்டே டம்ப்ளரை எடுத்தான்.  தான் பில்ட்டர் காபி குடித்து எவ்வளோ வருஷம் ஆகியது என்று நினைத்துக்கொண்டே T V  ஆன் செய்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தான். மிகப் பொறுமையாக ஊதிக்கொண்டே குடிக்க ஆரம்பித்தான்.  அவன் முக்கால் வாசி குதித்துக் முடித்திருந்தான். அவள், மாடியிலிருந்து தடதட வென்று படியில் இறங்கி வந்து வாசலை நோக்கி ஓடினாள். 

சுரேஷ், ' காபி கு தேங்க்ஸ்' என்றான். திரும்பிப்பர்காமல், அவள் ஒரு கணம் தாமதித்து, 'மாகிகு தேங்க்ஸ்'  என்று கூறிவிட்டு கதவை சாத்திவிட்டு ஓடினாள்.

காபியை முடித்துவிட்டு தனது ட்ய்பிங் ஐ தொடரப்போனான். என்று மதியம் சென்று கொடுத்துவிட வேண்டும்  என்று எண்ணிக் கொண்டான். கடைசி நிமிட செக்கிங் செய்ய ஆரம்பித்தான்.

மத்தியானம் அவன் காபி செய்யப்பட்டிருந்த pendrive உடன் கிளம்பினான்.  அந்த பப்ளிஷிங் கம்பனி தேனாம்பேட்டையில்  இருந்தது. அவன் போய் தனது கதையை கொடுத்துவிட்டு பிரகாஷுடன் பேசிவிட்டு திரும்பும்போது மணி எட்டாகி விட்டது.

கதவு பூட்டிருக்கவில்லை.  அவள் வந்திருப்பாள் என்று யூகித்தான். கதவை திறக்க முயன்றான். முடியவில்லை. 'ச்சே' என்றபடி பெல் அடித்தான்.  ஒரு நிமிடத்தில் கதவு திறந்தது. அவள் மொபிலில் பேசிக் கொண்டிருந்தாள்.  திறந்து விடு சமையலறைக்குள் போய் விட்டாள். 

'ஆமாம் மாமி. பால்சுத்தமா திரிஞ்சி போச்சு. காபி சாப்டலாம் நு ஆசை ஆசையா வந்தேன்' அவள் கூறிக்கொண்டிருந்தாள். . 

';;;;;;'

'இல்லே மாமி. வேண்டாம். இதுக்காக போய் திரும்ப பால் வாங்கணுமா? வேற வேல இல்லே. இப எப்படியும் சபடனும்' என்றாள்
'.....'
'நல்ல ஐடியா மாமி. நாளைக்கு காலைல 1/4 lt பாகெட் வாங்கிகறேன். தேங்க்ஸ் மாமி.  சரி மாமி, தேங்க்ஸ் கால் பண்ணதுக்கு. பை மாமி. ' என்று கூறி வைத்தாள்.


'ஒரு நிமிஷம்'  என்ற அவன் குரலை கேட்டு திரும்பினாள்.

'நீங்க உள்ள தாப்பா போடதிங்க. எனக்கு கஷ்டமா இருக்கு.' என்றான்

'இல்லே, நான் மாடில இருந்தேன். கீழ யார் வந்தாலும் தெரியாதுல அதான்' என்றாள்

'சே, இதுக்குதான்' என்று அவன் முடிபதற்குள், அவள்,

'Please, அரம்பிகதிங்க. இல்லத்துக்கும் 'சே, இதுக்குதான்' நு சொல்லாதிங்க. உங்களோட ப்ரிவசி உங்களுக்கு முக்கியம் agreed . அதுக்காக சும்மா சும்மா கத்த வேண்டாம். இப்போ என்ன, கதவ உள்ள தாப்பா போடா வேண்டாம் அவளோ தானே. இங்கே தெரு முனைல hardware shop பாத்தேன். இப்போ தான் auto-lock சிஸ்டம் லாம் வந்திருகுல. நாளைக்கு வந்து பிக்ஸ் பண்ண சொல்லிடறேன். இதுக்கு நான் தான் reason கரதால நானே pay  பண்ணிடறேன். எல்லா problemkum solution இருக்கும். சும்மா கதறத விட solve பண்ண பாக்கணும்' என்று பொரிந்து விட்டு தான் வங்கி வந்த தோசை மாவு பாக்கெட் ஐ கட் செய்ய ஆரம்பித்தாள்.

அவன் அங்கேயே ஸ்தம்பித்து நின்றிருந்தான். 'அப்பறம் உங்க மாகி பக்கெட்டை ரேப்லாசே பண்ணிட்டேன்' என்றாள்.

அவன் பதிலேதும் சொல்லாததால், திரும்பி பார்த்தாள். 

'உங்க காப்பிய திரும்ப கேகதிங்க. அதுக்கு பதில எவளோ வேன்னும்னாலும் மாகிய எடுத்துகோங்க. என்றான்.

'ம்ம்.. OK.' லேசாக புன்னகைத்தால்.

'அப்பறம், என்னோட ஒவ்வொரு கத்த முடிஞ்சபிறகு,  நான் மொட்டை மாடில தான் இருப்பேன்' என்றான்.

'இல்லே. எனக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லே. நான் மாடிக்கு போறதே இல்லே' என்றாள்.

அவன் மாடி ஏறினான்.

'ஒ! மாவுல உப்பு சேக்கணுமா. சரி நாளைக்கு உப்பு பக்கெட் வாங்கணும்,' என்று தனக்கு தானே கூறிக்கொண்டு தோசை வார்க்க ஆரம்பித்தாள் -- தனக்கு மட்டும்.

Tuesday, March 24, 2009

ஒரு கதாசிரியரின் கதை - 4

4. மாகி

மாமி அவளை தெருமுனையில் இருக்கும் மளிகை கடையில் அறிமுகப்படுத்தினாள். பின் இருவரும் வண்டியில் கிளம்பினர். ஐந்து நிமிடங்களில் கூட்ரோடை அடைந்தனர். அது ஒரு மினி தி.நகர் போல் இருந்தது. துணிகடை, பாத்திரக்கடை, ஸுப்பர்மார்கட், கோயில் என சகலமும் அங்கே இருந்தது. அனைத்து வங்கிகளின் எடிஎமும் இருந்தன. அனைத்தையும் பார்த்துக் கொண்டாள். மாமி அவளை வீட்டிற்கு கொண்டு விடுவதாக கூறியபோது, தாமே நடந்து போய் கொள்வதாகக் கூறினாள். மாமி அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

வழியில் அனைத்து கடைகளையும் பார்த்துக் கொண்டு நடக்கலானாள். காபி டே வந்தது. காபி பொடியின் மணம் அவளை கடைக்குள் இழுத்தது. காபி பொடி வாங்கிக் கொண்டு கிளம்பினாள். ஞாயிற்று கிழமை ஆனாலும் கூட்டத்திற்கு குறையில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். வீட்டிற்கு வந்த போது மணி ஆறரை. கதவை வெறுமே சாத்திக் கொண்டு போனதால் சத்தம் இல்லாமல் உள்ளே வந்தாள். ரூமிற்கு போய் மெத்தையில் தொப்பென்று விழுந்தாள்.

‘ஆ... காலு வலிக்குது. மாமி கொண்டு விடறேன் சொன்னப்போ பேசாம, தாங்ஸ்னு ஏறிட்றிருக்கணும்.’ தன்னைத் தானே நொந்துக்கொண்டாள். சுத்தம் செய்தது, நடந்து வந்தது எல்லாம் அவளை சோர்வாக்கின. தன்னை அறியாமல் உறங்கிப்போனாள். எத்தனை நேரம் உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. அவளது மொபைல் அலறியதில் திடுகிட்டு எழுந்தாள். தனது கைப்பையினுள் அதனை தேடி எடுத்தாள்.

‘ஹலோ’ கண்னை முடிக்கொண்டே பேசினாள்.

‘என்னடி பண்ற. அதுக்குள்ள துங்கிடியா’ எதிர்முனை அதட்டியது.

நன்றாக கண்ணை விழித்துக் கொண்டு ‘அம்மா, தூங்கல மா. தூங்கி எழுந்துட்டேன். ஆறு மணிக்கே’ என்றாள்.

‘என்னடி சந்திய வேளைல. தனியா போய் ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள இப்படி ஆகிட்டியே ’ சத்தம் போட்டாள் அம்மா.

‘ஆரம்பிக்காதம்மா. டயர்டா இருந்தது. ஐஞ்சு நிமிஷம் படுத்துக்கலாம்னு நெனச்சேன். அப்படியே தூங்கிட்டேன். விடு பிளிஸ். தோ எழுந்துட்டேன்’ என்றபடி பெட்டை விட்டு எழுந்தாள்.

‘அப்பறம், போனதும் பெரிசா இடி விழுந்துதாமே. கேள்விப்பட்டேன்.’ கேட்டாள் அம்மா.

‘ஹா ஹா. ஆமாம்மா. நாங்க ரெண்டு பேருமே எதர்பாக்கல. ஆனா பிராப்ளம் ஏதும் வரும்னு தோணல.அப்பொ கதவ டமால்னது தான். இதுவர தறக்கல. அப்பாகிட்ட மட்டும் சொல்லாத’ என்றாள்.

‘நான் எங்க சொல்லறது. மாமி,நீங்க ரெண்டு பேரும் சுத்தம் பண்னது, கடைதெருக்கு போனு எல்லாம் சொன்னாங்க. அப்பா சரி பிராப்ளம் ஏதும் இல்லனு கொஞ்சம் கோவத்த கொறச்சிகிட்டாரு. அப்பறம் மாமியும் நானும் கிச்சன்ல பேசிகிட்டு இருந்தோம் உன்னோட என்றிய பத்தி. அப்பா அப்போ தண்ணி குடிக்க வந்திருக்காரு. எல்லாத்தையும் கேட்டுட்டாரு. அவ்வளோ தான். காலையோட இடி வெறும் பிஜி வெடி தான்கறா மாதிரி ஒரே சத்தம். அவன் யாரு என் பொண்ணுகிட்ட அப்படி பேசனு. அவர சாளிக்கறதுக்குள்ள ஒரு வழி ஆச்சு.’ கூறினாள் அம்மா.

‘ஆமாம் அவரோட பொண்ண அவர் தான் திட்டணும்’ முணுமுணுதாள்.

‘உன்னையும் திட்டினாரு. அவனுக்கு இருக்கற அறிவு இவளுக்கு எங்க போச்சுனு, ஒரே சத்தம். எல்லா பேரன்ட்ஸும் இப்படி தான்டி. விட்டு பிடிக்கவும் மாட்டோம், விட்டு கொடுக்கவும் மாட்டோம். நீ நாளைக்கு வீட்டுக்கு வந் ஆகணும்னு ஒரே குதி. வந்திடரையா? ’ அம்மா கேட்டாள்.

‘என்னமா சொல்லற.பர்ஸ்டு நாளே பாக் டு த பெவிலியனா? ’ சிணுங்கினாள்.

‘என்னடி பண்ண சொல்லற. எவன்கிட்டயோ திட்டு வாங்கவா நாங்க உன்ன பெத்தோம். கஷ்டமா இருக்குடி’ அம்மா வருத்தப்பட்டாள்.

‘நீ திட்டும் போது ஒரு தடவயாவது கஷ்டப்பட்டிருப்பியா? ’ சிரித்தாள்.

‘அது எங்க உரிமடீ. நீ நாளைக்கு வரியா இல்லயா, அத சொல்லு.’ அம்மா கண்டிப்பானாள்.

‘அம்மா ஒரு வாரம் டைம் கொடு. அதுக்குள்ள அவங்க சாரி கேக்கலைனா நான் வந்திடரேன். பிளீஸ் டைம் கொடுமா’ கெஞ்சினாள்.

ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு பதில் வந்தது. ‘சரி அடுத்த சன்டே பாக்கலாம்’

‘முடிவே பண்ணிடியாமா’ சோர்வாக கேட்டாள்.

அம்மா சிரித்தாள். ‘நீ அடுத்த சன்டே வரியோ இல்ல பிளான்படி ரெண்டு மாசத்துல வரியோ, உன் இஷ்டம் ஆனா நெக்ஸ்ட் டைம் திட்டு வாங்கிட்டு நிக்காத’

அம்மா முடிப்பதற்குள் கேட்டாள். ‘பளார்னு ஒண்ணு கொடுத்துட்ட்டுமா?’ சிரித்தபடி கேட்டாள்

‘அது உன் சாமர்தியம். பிராப்ளமே இல்லாம இருந்துப்பியோ, இல்ல அடிசிப்பிங்களோ. ஆனா ஒரு சின்ன பிராப்ளம்னாலும் அடுத்த நிமிஷம் நீ வீடுல இருக்கணும். புரியுதா. சரி, அதவிடு, சாப்டியா? ’ அம்மா கேட்டாள்.

‘இல்லமா இனிமேதான். தூங்கிடேன்ல. அம்மா, நம்ப மாட்ட இங்க பிரிட்ஜ் புல்லா வெரைடி வெரைடியா மாகி தான்மா’ பதிலளித்தாள்.

‘போச்சுடா. இதுதான் சாக்குனு 24மணி நேரமும் மாகில முழுகிடாத, கேட்டியா. சரி சாப்ட்டு தூங்கு. நாளைக்கு ஆபிஸ் போகணும்ல’ அம்மா அக்கறையானாள்.

‘சரிம்மா. நீ கவலபடாத. உனக்கே தெரியும்ல கொஞ்சம் பிராப்ளம்னாலும் நான் சொல்லவேண்டியத சொல்லிட்டு வந்துடுவேன். நீங்க ரெண்டு பேரும் பாத்துகோங்க. நாளைக்கு கால் பண்ணறேன். பை மா. ’ அம்மாவிடம் விடைபெற்றாள்.

மொபைலை அணைத்துவிட்டு முகம் கை-கால் அலம்பிக் கொண்டு கிழே இறங்கி பிள்ளையாரை கும்பிட்டாள். சமையலறைக்குள் நுழைந்து, பிரிட்ஜிலிருந்து மாகி டபுள் பாக்கெட்டை பிரித்து அடுப்பில் போட்டாள். வாசலில் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே எட்டிப் பார்த்தாள். சுரேஷ் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

‘வெளில போனதே தெரியலையே. நல்லா தூங்கிருக்கேன்.’ தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள். அவனும் அவளைப் பார்த்துவிட்டு நின்றான்.

அவன் ஆரம்பித்தான். ‘நீங்க இருக்கறது ஞாபகம் இல்லாம பூட்டிட்டு போயிடேன்.’ முடித்தான்.

‘ஓ’ என்றாள். அதற்குள் மாகி வாசனை வெளியே வரவே, சமையலறையை திரும்பி பார்த்து, ‘மாகி பண்ணிட்டு இருக்கேன், சாப்படறீங்களா’ என்று கேட்டாள்.

‘ஒரு நிமிஷம். பூட்டிடேன்கறதுனால கில்டியா பீல் பண்ணி பேசினேன். அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்லறேன். டோன்ட் டிஸ்டர்பு மீ. நான் உங்கள சமைக்க சொல்லலியே’ கோவமாக கேட்டான்.

‘நீங்க சொல்லல. ஆனா பிரிட்ஜிலேந்து தான் மாகி எடுத்திட்டேன். கடைக்கு போனப்போ மறந்துட்டேன். அதான் சேத்து செஞ்சேன்.’ தயங்கியபடி கூறினாள்.

‘அடுத்தவங்களது எடுக்கும் போது கேக்கணும்னு கூடவா தெரியாது.’ எகிறினான்.

‘கடைக்கு இப்ப போக ரொம்ப டயர்டா இருந்தது. இங்க ஸ்டாக் நெறய இருக்கேனு எடுத்தேன், உங்ககிட்ட சொல்லிக்கலாம்னு. ’

‘உங்க இஷ்டத்துக்கு ஏதும் நெனக்காதீங்க. இதுக்கு தான் யாரும் வேண்டாம்னு இருந்தேன், மாமி சதி செஞ்சுடாங்க. ’ குரலை உயர்தினான்.

‘உங்க பர்மிஷன் இல்லாம எடுத்தது தப்பு தான். சாரி, இப்பவே கடைக்கு போய் உங்க மாகிய ரீபிளேஸ் பண்ணிடறேன். ஆனா கத்தறதுனால ஒண்ணும் சாதிக்க முடியாது’ என்று அமைதியாக கூறிவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு மாடி ஏறினாள்.

‘நான் ரீபிளேஸ்மெண்ட் கேக்கல. ஆனா என் சம்மந்தபட்ட எந்த எல்லைகுள்ளும் யாரும் வரத நான் அனுமதிக்க மாட்டேன்.’ கூறிவிட்டு தன் கூட்டிற்குள் அடைந்து கொண்டான்

அவள் கீழிறங்கி வந்தாள். சமையலறை மேடையில் சாய்ந்து கொண்டு கண் மூடினாள். ‘எனக்கு தேவயில்லாத வேல. நல்லா வேணும் எனக்கு’ தன்னை நொந்தபடி மாகியை ஒரு தட்டில் கவிழ்த்க் கொண்டு ஸ்பூணுடன் டீவீ முன் சென்று அமர்ந்து அதனை ஆன் செய்தாள். டீவீ பார்த்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

‘இத்தன நாள்ல, இப்படி டேஸ்டே இல்லாம, மாகி இருந்ததே இல்ல’ என்றெண்ணியடி மாகியை முழுங்க ஆரம்பித்தாள்.
தொடரும்....

Thursday, March 19, 2009

ஒரு கதாசிரியரின் கதை - 3

பகுதி - 3 - சுரேஷ்


உள்ளே சென்ற மாமியும் அவளும் ஒரு நிமிடம் சுற்றிப் பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டனர். ‘மாமி, நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். நீங்க உக்காந்துகோங்க’ என்றாள்.
‘எங்க உக்கார. என் புடவ என்ன திட்டும், இதுல உக்காந்தா. நீ ஒட்டட அடிச்சு பெருக்கு, நான் இதெல்லாம் தொடச்சி வெக்கறேன். ’ மாமி ஐடியா தந்தாள்.

‘ஓகே மாமி. ஆனா முடியலேனா வெச்சுடுங்க, நான் பாத்துக்கறேன். இருங்க ஒரு டவல் கொண்டுவரேன். மூக்குல கட்டிக்கோங்க ’ என்றபடி படி ஏறினாள்.

‘சரிடீம்மா. நான், துடப்பமும் ஒட்டடகோலும் எடுத்து வெக்கறேன்’ என்றபடி மாமி தோட்டத்திற்கு சென்றாள்.

விரைவில் இருவரும், தத்தம் வேலையை செய்ய ஆரம்பித்தனர். இருபது நிமிடங்களில் ஒட்டடை வேலையை முடித்தாள். மாமி டீவீ, பிரிட்ஜ் எல்லாவற்றையும் மும்முரமாகத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

‘மாமி ஹெல்ப் வேணுமா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகோங்க’ என்றபடி மேடையில் அமர்ந்திருந்த ஸ்டவுடன் போராடிக்கொண்டிருந்த மாமியிடம் போய் நின்றாள்.

‘ஆ, கை வலிக்குது. அவனயும் ஹெல்புக்கு கூப்டுக்கலாம் நெனச்சென். ஆனா இப்போ பக்கத்துல கூட போக முடியாது. அக்சுலா சொல்லப்போனா, நீ இங்க தங்கப் போறேனு சொன்னதும் அவன் மண்டைய ஆட்டிட்டு அவன் ரூமுகுள்ள போய் அடஞ்சுகுவானு தான் நெனச்சேன். இப்படி குதிப்பான்னு நெனச்சுக்கூட பாக்கல.’ என்று மாமி கூறிக்கொண்டே தன் வலது கையை பிடித்துவிட்டுக்கொண்டாள்.

சிறிது மௌனத்திற்கு பிறகு, மாமி தொடர்ந்தாள். ‘அவன் காலேஜ் வரைக்கும் சோசல் டைப்பாதான் இருந்தான். அவனும் அவன் அம்மவும் தான். மைலாப்பூர்ல தான் இருந்தாங்க. அவன் சின்ன வயசுலுந்து அவன எனக்கு தெரியும்.
அவன் அம்மா ரொம்ப ஒண்ணும் படிக்கல. ஒரு மெடிக்கல் ஷாப்ல தான் வேல. ரொம்ப வருஷம் அங்க இருந்தா. அப்பறம் லாப் அஸிஸ்டண்டுக்கு படிச்சு அந்த மெடிகல் ஷாப்க்கு சொந்தமான லாபுக்கு இன்சார்ஜ் ஆனா.
ரொம்ப சின்ன வயசுலேயே அவன் அப்பா போயிட்டு. அம்மா தான் தனியா வளத்தா. அவங்களோட நெலமய சொல்லி வளத்ததால அவனும் அவள அநாவசிமா எதுக்கும் தொந்தரவு பண்ணதில்ல. காலைல பேப்பர் டெலிகதறல்வர் பண்ணி அவனும் அவனால முடிஞ்சத செஞ்சிட்டிருந்தான். அவங்க ரெண்டு பேரயும் ரிலாக்ஸுடா வெச்சிருத்தே அவனோட எழுத்துக்கள் தான்.
முக்காவாசி நேரம் அவன் தனியா இருந்ததால, அவன் அம்மா “நீ எத பக்கும் போதும் அத பத்ன உன் மனசுல தோன்றத எழுதி வையு. நான் வீட்டுக்கு வந்ததும் படிக்கறேன். ஸ்கூல நடந்தது பிரண்டு கூட நடந்தது எதுனாலும் எழுது” னு சொல்லிருந்தா. அப்போ எழுத ஆரம்பிசவன் தான். எழுதி எழுதி அவன் கற்பன திறன் வளந்தது. கத கவதனு எழுத ஆரம்பிச்சான்.
நைட் சாப்டும் போது அவன் எழுதினத ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணுவாங்க. அவ இவனோட காலே செகண்டு இயர்ல போய் சேந்துட்டா. இவன்கிட கடசியா கேட்டுக்கிட்டது - காலேஜ எப்படியும் முடிச்சுடு, எழுதறத என்னிக்கும் நிறுத்தாத – இது ரெண்டும் தான்.
லாப்ல இருந்ததால அவ நெலம அவளுக்கு முன்னமே தெரிஞ்சிருந்துது. ஒரு வருஷ வாடகய அட்வான்ஸா பே பண்ணிருந்தா. நம்பினா நம்பு, அவளோட கடசி காரியத்துக்காகர செலவு வர தனித்தனியா கவர் போட்டு வச்சிருந்தா. அத பாத்ததும் அவன் கதறின கதறல், எனக்கு இப்போ நெனச்சாலும் அழுக வருது.’ கண்ணை துடைத்துக்கொண்டாள் மாமி.
மாமி தொடர்ந்தாள். ‘அவன் பிரண்டு கார்தி தான் கூட முழுக்க முழுக்க இருந்தான். காலேஜுல லிடேரச்சர் படிச்சுகிட்டு இருந்லும், மாக்ஸ் நல்லா போடுவான். டியுசன் எடுது தன் செலவ பாத்துகிட்டிருந்தான். அந்த பசங்க கிட்ட ரெணடு மாச டியுசன் பீஸ் அட்வான்ஸா வாங்கி, அவ காரியத்த முடிசான். அவ எடுத்து வெச்சிருந்த கவர் இன்னி வரைக்கும் அவன் கிட்ட இருக்குனு நெனக்கறேன்.’ மாமி முடிக்கும் போது இருவரும் கண்ணீரோடு இருந்தனர்.
‘இன்னி வரைக்கும் கார்தி தான் அவன் பிரண்டு. கார்திக்கு ஒரு வார பத்திரிகையோட எடிட்டர தெரிஞ்சிருந்தது. இவன இன்ரொடியுஸ் பண்ணினான். இவனோட ஒரு பக்க கதை, சிறுகதை அவங்க பப்ளிஷ் பண்ணாங்க. டியுசன், கதை, பேப்பர் டெலிவரி இதுல வந்த பணத்த வச்சு எப்படியோ காலேஜ் முடிச்சான். ஸ்காலர்ஷிபும் இருந்ததால சுலபமாச்சு. அவன் எழுத்துகளு பிரபலமாச்சு.
காலேஜ் முடிச்சதும், ஒரு பப்ளிஷிங் கம்பெனி நாவல் எழுதி தர கேட்டுகிட்டாங்க. இவனும், சந்தோஷமா முடிச்சான். இவனோட இன்னோரு பிரண்டு தான் இவனுக்காக டைப் செஞ்சிட்ருந்தான், இவனுக்கு தெரியாததால. டெட்லைன்கு முன்னாடி நாள் அவனுக்கு போன் பண்ணி கேட்டா, அவன் என்னடான்னா, இன்னெரு பிரண்டு கூட படத்துக்கு போய்டானாம். என்னடா இப்படி பண்ணிடனு கேட்டா, “நான் உனக்கு ஹெல்பு தான் பண்ணறேன், நீ ஒண்ணும் எனக்கு சம்பளம் தரல”னு மூஞ்சுல அடிச்சுடானாம்.
இவனும் கார்தியும் போய் அந்த பையன்கிட்டேந்து, அவன் டைப் பண்ணி முடிச்ச வரைக்கும் போய் வாங்கிட்டு வந்து மீதிய கார்தி நைட் புல்லா உக்காந்து முடிச்சு தந்தானாம். கொண்டு போய் சப்மிட் பண்ணுக்கப்பறம் தான் ரெண்டு பேரும் வாய தெறந்தாங்களாம்.
இவன் கம்புயூட்டர் யூஸ் பண்ண பர்மிஷன் கேட்ருக்கான். ஆனா கார்தி, “நீனா கத்துகறத விட டைபிங் சென்டர்ல போய் கத்துகறது தான் நல்லது. தமிழ் டைபிங் அவ்வளோ இஸி இல்ல”னு அவன ஒரு இன்ஸ்டிடுட்ல சேத்தான். அங்க ஆறு மாசம் படிச்சான். இருந்த சேவிங்ச வெச்சு செகண்டு ஹாண்டு கம்பியுட்டர் வாங்கினான். அப்போலேந்து தான் இவன் இப்படி ஆனான். கிளாஸ், வீட்டுல டைபிங் பிராக்டிஸ் அப்பறம் கதை எழுதனும், எழுதினத டைப் செயணும், அவனே ப்ருப் ரீடிங்கும் பாக்க ஆரம்பிச்சான். இதெல்லாம் பண்ணிட்டு இருந்ததால வீட்டுலேயே கன்பைன் ஆகிட்டன். எல்லாரோடையும் கான்டாக்டு இல்லாம போச்சு. யாருமே வேண்டாம்னு ஆகிட்டான். இப்போ வெளில வர தெரியல.’ என்று மாமி முடிக்கும் போது சமையலறையும் குளித்திருந்தது.

‘அவனால உனக்கு ஒரு பிராப்ளமும் இருக்காது. இப்படி கத்தினாலும் நியூசன்ஸா இருக்க மாட்டான். அவன பத்தி அவ்வளோ தான்.’ என்றபடி பின் கழுத்தில் கையை வைத்து தலையை சுற்றிக்கொண்டு எக்ஸர்சைஸ் செய்தாள் மாமி.

தோட்டத்தில் இருவரும் முகம், கை-கால் அலம்பிக்கொண்டார்கள். ‘பக்கத்துல காபிடே இருக்கு. வா போய் காபி போடி வாங்கி வரலாம்’ மாமி அழைத்தாள்.

‘இல்ல மாமி, தெரு மொனைல கடை பாத்தேன். பால் பாக்கெட், புரு, சக்கர வாங்கி வரேன்.’ கூறிக்கொண்டே மாடி ஏறினாள், பர்ஸ் எடுத்துவர. வாங்கி கொண்டு வந்தாள். இருவரும் காபி குடித்து முடித்தனர். மாமி மணி பார்த்தாள். நான்கை தொட்டுக்கொண்டிருந்தது சின்ன முள்.

‘சரி நான் கெளம்பறேன். நீயும் என் கூட வா, ஏதாவது வாங்க வேண்டியிருந்தா’ மாமி அழைத்தாள்.

‘வாங்க ஏதும் இல்ல. ஆனா லோகேஷன் பாத்து வச்சுகறேன் – பஸ் ஸ்டாண்டு, கடை எல்லாம். வாங்க போகலாம்’ என்றாள். இருவரும் கதவை சாத்திக்கௌண்டு கிளம்பினர்.

Monday, March 16, 2009

ஒரு கதாசிரியரின் கதை - 2

2. வீடு


‘மாமி இந்த களேபரத்துல மறந்துட்டு போயிட்டாங்க. ம்ம்.. நாமளே பாத்துக்கலாம்’ என்றெண்ணிக் கொண்டே அவள் வாசல் கேட் அருகே சென்றாள்.


வாசல் கேட்டிற்கும் உள் கேட்டிற்கும் ஐந்து அடி இடைவெளி இருக்கும். நடுவே மட்டும் சிமிண்ட் தரை மூண்று அடிக்கு இருக்க, சுற்றிலும் மண்ணாக விடப்பட்டிருந்தது. தோட்டப்பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற வீடு என எண்ணினாள்.


அந்த சிமிண்ட் தரை அப்படியே வீட்டை சுற்றிக்கொண்டு சென்றது. உட்கார்ந்து வம்படிப்பதற்கு சிமிண்டிலான மேடை சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு படி ஏறினால் உள் கேட்டினுள் ஒரு சிறிய ரூம். அது ஒரு சிட் அவுட். அங்கே தான் இ.பி. மீட்டர், ஷூ ராக் இருந்தது. கிரிலும் ஜன்னலும் நல்ல காற்றையும் வெளிச்சத்தையம் தந்து கொண்டிருந்தது. கிரிலைப் பூட்டிக் கொண்டு உள்ளே சென்றாள்.


இதனைத் தாண்டியதும் மரக் கதவு. அதற்குப் பின்னால், ஒரு விஸ்தாரமான ஹால். ஹாலின் நடுவில் சோபா செட்டும் டீபாயும் இருந்தன. சுத்தம் என்ன என்பதை அறிந்து கொஞ்ச காலம் ஆகியது என்று அவை கூறிக் கொண்டிருந்தன. அதற்கு நேர் இடது புறம் ஒரு ரூம். சுரேஷ் ‘டமால்’ என்று கதவை அறைந்து கொண்டு போன ரூம். கதவைப் பார்த்த அவளுக்கு ‘DANGER 440V KEEPOUT’ என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது. புன்னகைத்தாள்.


அந்த ரூமிற்கு நேர் வலது புறம் தான் இவளது ரூமிற்கு போகக் கூடிய மாடிப்படிகள் இருந்தன. தனது ரூமை ஏற்கனவே கண்டிருந்ததால் சுரேஷின் ரூம் எப்படி இருக்கும் என்று அவளால் யூகிக்க முடிந்தது. மாடிப்படியின் அடியில் தான் டீவீ இருந்தது. அதுவும் தூசைப் போர்த்திக் கொண்டிருந்தது. டீபாயின் மேல் ரிமோட் கிடந்தது.


ஹாலைத் தாண்டிக் கொண்டு போனால் சமயலறை. மிகவும் காம்பாக்ட் ஆக இருந்தது. நுழைந்ததும் பிரிட்ஜ் இருந்தது. மற்ற பொருட்களுக்கு நான் சளைத்தவள் அல்ல என்றவாறு தூசு மண்டியிருந்தது. அதனை ஒட்டி பாத்திர செல்ப், அதனை ஒட்டி மேடை மற்றம் சிங்க். மேடையில் எண்ணை ஏறிய ஸ்டவ் ஒன்று ‘சும்மா தான் இருக்கேன்’ என்று உட்கார்ந்துக் கொண்டிருந்தது.


சமயலறையைத் தாண்டி தோட்டம். துளசி மாடம் ஒன்று துளசிச் செடி இல்லாமல் இருந்தது. கிணறு, மோட்டார், துணி துவைக்கும் கல் என சகல இத்தியாதிகளும் இருந்தன. தோட்டத்திலிருந்துப் பார்த்தால் வெளி கேட் தெரிந்தது.


திடீரென்று அவளுக்கு சில சந்தேகங்கள். பிரிட்ஜை திறந்து பார்த்தாள். மேகி ஹோல்-சேல் கடைக்குள் நுழைந்தது போலிருந்தது. மேகியின் அனைத்து வெரைட்டிகளும் உள்ளே இருந்தது. கதவை மூடிவிட்டு சுரேஷின் ரூமை நோக்கினாள். பெருமூச்சு விட்டாள். தானும் தற்போது தனியாக இருக்கிறோம், தானும் மேகி மேனியாக் ஆகிவிடுவோமோ என்று எண்ணினாள்.


அடுத்த சந்தேகத்தைத் தீர்க மீண்டும் ஹாலுக்கு வந்தாள். சற்றிப் பார்த்தாள். ஒரு ஷோகேஸ் தான் இருந்தது. ஆனால் காலியாக இருந்தது. அப்போ பூஜை அறை எங்கே? தேடினாள். சமயலறையை ஒட்டிய ஹாலின் சுவரில் ஒரு பிள்ளையார் படம் இருந்தது. ஓகோ இது தான் சாமி ரூம் போல என்று பிள்ளையாரின் முன் சென்று கை கூப்பினாள்.


எல்லாம் சரி, மிக முக்கியமான பாத்ரூம் எங்கே? தேடிக்கொண்டு அவசர அவசரமாகத் தோட்டத்தை அடைந்தாள். அங்கே வெறும் வாஷ்பேசின் தான் இருந்தது. ஆஹா எங்கே போயிற்று என்று தேடிக்கொண்டே தன் ரூமிற்கு ஓடினாள். அப்போது தான் பார்த்தாள். ரூமின் வலது மூலையில் ஒரு கதவு துணி உலர்த்தும் பல ராடுகளைக் கொண்ட துணி மாட்டிக்குப் பின்னால் இருந்தது. அதை நகர்த்திவிட்டு திறந்து பார்த்தாள். ‘அப்பாடா’ என்று நிம்மதியானாள். இடது மூலையின் கதவு சிறிய வராந்தாவை காட்டியது. ரூமை விட்டு வெளியே வந்ததும் படிகள் மேலும் நீண்டு மோட்டை மாடிக்கு அவளை அழைத்துச் சென்றது. மாடிக்குச் சென்று சற்றிலும் பார்த்துவிட்டு முன் கேட்டை பார்த்துக் கொண்டு சுவரில் உட்கார்ந்தாள்.


அப்போது மாமி ஸ்கூடியில் வந்திறங்கியதை கண்டு கீழே ஓடினாள். ‘நல்ல வேள மாமி, நீங்க பெல் அடிக்கறத்துக்குள்ள வந்தட்டேன். இல்லேனா ரெண்டு பேரும் செமத்தியா வாங்கி கட்டிட்டிருப்போம்’ என்று சிரித்துக் கொண்டே கதவைத் திறந்தாள்.

அவளை வெறுமையாகப் பார்த்விட்டு, ‘எப்பட இருந்தவன் இப்படி ஆகிட்டாங்கறத்துக்கு அவன் ஒரு நல்ல எக்ஸாம்பிள். நல்ல பையன்மா அவன். கூட யாரும் வேண்டாம்னு இருக்கன். அவ்வளோ தான். சரி அவன விடு. வீட காட்டறேன்னு ஓடிட்டேன். அதோட உன் ஒருத்தியால சுத்தம் பண்ண முடியாது. அதான் வந்தேன். வா போய் வேலய பாக்கலாம்’ என்றபடி இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

ஒரு கதாசிரியரின் கதை - 1

1.புது வரவு

டக்... டக் டக்.... டக் டக் டக்.... கம்பியூட்டரின் கீபோர்டை வேகமாகத் தட்டிக் கொண்டிருந்தான் சுரேஷ். இன்னும் இரண்டு நாட்களில் அவனது நாவலின் ஸ்கிரிப்டை எடிட்டரிடம் கொடுத்தாக வேண்டும். இன்னும் 50 பக்கங்கள் டைப் செய்ய வேண்டியிருந்தது.

சுரேஷ் கடந்த 5 ஆண்டுகளின் அயரா உழைப்பால் நாவல் உலக்த்தில் தனக்கென ஓர் இடத்தை ஸ்தாபித்திருந்தான். அவனது வயது, இரண்டு மாதங்களில் வரவிருக்கும் அக்டோபரில் 28 முடியும்.

க்ரைம், காதல், சமுதாயக் கதை – எல்லாப் பிரிவுகளிலும் அவன் எழுத்துக்கள் பிரபலம். அரை பக்கக் கதையிலிருந்து ஐந்நூறு பக்க நாவல் வரை எழுதியுள்ளான். தற்போது ‘அபிமானி’ என்ற குறுநாவலை எழுதி வருகிறான். அவனது விரல்கள் கீபோர்டின் மேல் நடனமாடிக் கொண்டிருந்தது.

டிங் டாங் ....

வாசலில் அழைப்பு மணி அந்த நாட்டியத்தை தடுத்தது. கண்ணை மூடிக்கொண்டு அரை நிமிடம் தாமதித்து மீண்டும் ஆரம்பித்தான்.

டிங் டாங் .... டிங் டாங் .... இம்முறை வேகமாக மணி அழைத்தது.

‘சே, எப்போ பாரு இது வேணுமா, அது வேணுமானு யாராவது வந்துகிட்டே இருக்காங்க’ என்று அலுத்துக்கொண்டே கதவை திறந்தான்.

‘ஓ மாமி நீங்களா, வாங்க. நான் யாரோ சேல்ஸ் ரெப்னு நெனச்சு கதவ தெறக்கல’ என்ற படி சோபாவில் தூசு தட்டினான்.

‘உக்காருங்க மாமி. 5 ஆந் தேதியா இன்னிக்கு. வாடக எடுத்துட்டு வரேன். ஒரு நிமிஷம்’ என்று உள்ளே போனான்.

‘இன்னிக்கு ஒண்ணாந் தேதி தான்டா’ என்று அவனுக்கு சொல்லிவிட்டு, ‘நீ உள்ள வாம்மா’ என்று வாசலை நோக்கிக் குரல் கொடுத்தாள்.

சுரேஷ் உள்ளிருந்து எட்டிப்பார்த்தான். வாசலில் ஒரு பெட்டியும் ஹண்டுபாக் உடணும் ஒரு பெண் உள்ளே வந்தாள். வெள்ளை குர்த்தாவும் நீல ஜீன்ஸும் அணிந்திருந்தாள். கூந்தலை சும்மா சுருட்டி ஒரு பெரிய கிளிப் ஒன்று போட்டிருந்தாள். அவளுக்கு சுமார் 25 வயதிருக்கும் என்று எண்ணினான்.

‘மாடில தான்மா உன் ரூம். வீடு புல்லி பர்னிஷ்டு தான். கிட்சன்ல பாத்திரங்கலிருந்து பிரிட்ஜு எல்லாமே இருக்கு. நீ தாராளமா யுஸ் பண்ணிக்கலாம். போய் பெட்டிய மாடில வச்சுட்டு வா, வீட்ட சுத்தி காட்டறேன்.’ என்ற மாமியின் முன்னால் சுரேஷ், முகத்தில் ஒரு பெரிய கேள்விக்குறியோடு போய் நின்றான்.

‘மாமி, ஒரு நிமஷம். என்ன சொல்லவரிங்க. எனக்கு புரியல. இவங்க யாரு?’ கேட்டான் சுரேஷ்.


‘இவ இந்நிலேந்து இங்க வாடகைக்கு இருக்கப் போறா. பேரு ..’ என்று சொல்ல வந்தவளை தடுத்தான் சுரேஷ்.



‘அப்போ நான் எங்க போக? என்ன மாமி இப்படி பண்ணறீங்க? ஒரு வார்த்த கூட என்கிட்ட சொல்லல. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்.’ மிக கோவமாகக் கத்தினான் சுரேஷ்.


மாமி அவனை ஓர் பார்வை பார்து விட்டு தரையைப் பார்த்து பெரு மூச்சு விட்டாள். ‘நிறுத்துடா. கத்தாத. உன்ன வெளிய போக சொன்னேனா? இவளும் உன்ன மாதிரி இந்த வீட்டுல வாடகைக்கு இருக்கப் போறா. உன்னோட வாடக செலவ கொறச்சிருக்கேன்டா, சந்தோஷப்படு.’ என்றாள்.


‘மாமி, வாடகை ஜாஸ்தி வேணும்னா சொல்லுங்க, நான் தரேன். ஆனா, இன்னொருதங்க இங்க வேண்டாம். அதுவும் ஒரு பொண்ணு கண்டிப்பா வேண்டாம். அவங்க பெமலி கூட இருப்பாங்களா?’ கேட்டான்.


‘இல்ல’ மாமி பதிலளித்தாள்.


‘அப்போ கண்டிப்பா நான் ஒத்துக்க மாட்டேன். எப்படி மாமி ஒரு பொண்ண இங்க தனியா விடுவீங்க?’ எரிந்து விழுந்தான்.

‘அவ என்னோட ப்ரெண்டோட பொண்ணுடா. வீட்டுல ஒரு பிரச்சன. கொஞ்ச நாள் தனியா இருக்கலாம்னு வந்திருக்கா. தெரிஞ்சவங்க வீடுனா சவுகரியமா இருக்கும்னு நான் தான் இங்க வர சொன்னேன். இரண்டு மூணு மாசத்துக்கு தான்.’ மாமி விளக்கினாள்.


‘மாமி என்னோட பிரைவசிய என்னால விட்டுக்கொடுக்க முடியாது. யாரும் பக்கத்துல வேண்டாம்னு தானே ஒரு அசிஸ்டெண்டு கூட நான் வெச்சிக்கலை. நான் யாரையும் இந்த வீட்டுல அலோ பண்ண மாட்டேன்.’ விவாதித்தான் சுரேஷ்.


‘முணு காரணம் சொல்ல முடியும், அவ இங்க இருக்க.
1. உன் பிரைவசி ஒண்ணும் கெடாதுடா. நீ அந்த ரூம்குள்ள போய்டினா, வெளய இடியே விழுந்தாலும் உனக்கு தெரியப் போறதில்ல. அவ மாடில தான் இருக்கப் போறா. உனக்கும் கிட்சனுக்கும் சம்பந்தமே கெடயாது.
2. செகென்டா, வீட்ட எப்படி வைச்சிட்டிருக்க பாரு. வேலகாரி கூட நீ அந்த ரூம்லேந்து வெளிய வரமாட்டேனு நல்ல டிமிக்கி கொடுத்துட்டு சம்பளம் மட்டும் வாங்கிட்டு போறா. என்னால மாசா மாசம் மயிலாப்பூர்லேந்து மடிபாக்கத்துக்கு வந்துட்டு போக முடியாது. அவ இங்க இருந்தா வீடு வீடா இருக்கும்.
3. மூணாவதா, போன வாரம் பொண்ணு பாக்கறதா இருந்ததுல, சீக்கரம் கல்யாணம் முடிஞ்சிடும்னு நெனச்சேன். ஆனா நீ பொண்ணு பாக்கக்கூட போகல.’
- மாமி சொல்லி முடித்தாள்.


‘மாமி, பொண்ண போய் பாக்காதது என் தப்பு தான். என்னோட இருவது வயசுல அம்மா போனதுலேந்து தனியா இருக்கேன். தனியாவே பழகிட்டேன். கூட யாராவது இருந்தா அன்கம்பர்டபுளா இருக்கு. நீங்க சொன்னப்போ என்ன மாத்திக்கலாம்னு நெனச்சேன். ஆனா கடசீல முடியல. அதனால அவங்களுக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டுகிட்டேன். இப்போ திடீர்னு யாரயோ கூட்டிட்டு வந்து இங்க தங்க வெச்சா எனக்கு சபகேட்டிங்கா இருக்கும். ப்ளீஸ் மாமி, வேண்டாமே. ரொம்ப ப்ளீஸ்’ கெஞ்சினான் சுரேஷ்.


‘இந்த ரீசன நெறயவே கேட்டுட்டேன். அவ இங்க தான் இருக்கப் போறா. நீ உன் ரூமுக்குப் போய் பூட்டிக்கோ. அவ்வளோ தான். இது தான் பைனல். அவள இங்கிருந்து என்னால அனுப்ப முடியாது.’ என்றாள் மாமி தீர்மானமாக.





இவர்களது விவாதத்தை கேட்டபடி படியில் நின்றிருந்தாள் அந்த பெண். மாமியின் அருகில் வந்தாள். ‘நீ இங்க இருக்கலாம்மா. இவன் சுரேஷ். பெரிய எழுத்தாளன். பேசினது கேட்டல. ரெண்டு பேரும் ஒரு பிராப்ளம் இல்லாம கம்பர்டபுளா இருந்துகோங்க. நீ எப்ப வேணாலும் எனக்கு கால் பண்ணு ஓகேவா.’ என்று அவனை அவளிடம் அறிமுகப்படுத்தினாள்.


‘ஹலோ என் பேரு ....’ சொல்லவந்தவளை கோவமாக முறைத்து விட்டு ‘எதுவா இருந்தாலும் எனக்கு தேவயில்லாத விஷயம். எக்காரணத்தக்கொண்டும் என் ரூம் கிட்ட வராதீங்க’ பொரிந்துவிட்டு தன் அறையில் அடைந்துக் கொண்டான்.


மாமி அவளை பாவமாகப் பார்த்தாள். ‘கவல படாதீங்க மாமி. ஓரளவுக்கு இத எதிர்பார்த்து தான் வந்தேன். நீங்க அப்பா அம்மாவ பாத்துக்கோங்க. நான் டெய்லி கால் பண்ணறேன்னு சொல்லுங்க.’ என்றாள் அந்தப் பெண்.


அவள் முடிப்பதற்கு முன் மாமி அவனது கதவை தட்டி, ‘டேய் இவ உன்னோட நல்ல ரசிகைடா. இப்படி ஒரு பர்ஸ்ட் இம்பிரஷன் தந்திருக்கியே. அவளுக்கு ஏதாவது பிராப்ளம்னு கேள்விப்பட்டேன், நீ அவ்வளோ தான். தெரிஞ்சிக்கோ.’ என்று கூறிவிட்டு அந்தப் பெண்ணிடம் விடைப்பெற்றுக் கொண்டு தனது ஸ்கூடியில் பறந்தாள் ராதா மாமி.