Tuesday, March 24, 2009

ஒரு கதாசிரியரின் கதை - 4

4. மாகி

மாமி அவளை தெருமுனையில் இருக்கும் மளிகை கடையில் அறிமுகப்படுத்தினாள். பின் இருவரும் வண்டியில் கிளம்பினர். ஐந்து நிமிடங்களில் கூட்ரோடை அடைந்தனர். அது ஒரு மினி தி.நகர் போல் இருந்தது. துணிகடை, பாத்திரக்கடை, ஸுப்பர்மார்கட், கோயில் என சகலமும் அங்கே இருந்தது. அனைத்து வங்கிகளின் எடிஎமும் இருந்தன. அனைத்தையும் பார்த்துக் கொண்டாள். மாமி அவளை வீட்டிற்கு கொண்டு விடுவதாக கூறியபோது, தாமே நடந்து போய் கொள்வதாகக் கூறினாள். மாமி அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

வழியில் அனைத்து கடைகளையும் பார்த்துக் கொண்டு நடக்கலானாள். காபி டே வந்தது. காபி பொடியின் மணம் அவளை கடைக்குள் இழுத்தது. காபி பொடி வாங்கிக் கொண்டு கிளம்பினாள். ஞாயிற்று கிழமை ஆனாலும் கூட்டத்திற்கு குறையில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். வீட்டிற்கு வந்த போது மணி ஆறரை. கதவை வெறுமே சாத்திக் கொண்டு போனதால் சத்தம் இல்லாமல் உள்ளே வந்தாள். ரூமிற்கு போய் மெத்தையில் தொப்பென்று விழுந்தாள்.

‘ஆ... காலு வலிக்குது. மாமி கொண்டு விடறேன் சொன்னப்போ பேசாம, தாங்ஸ்னு ஏறிட்றிருக்கணும்.’ தன்னைத் தானே நொந்துக்கொண்டாள். சுத்தம் செய்தது, நடந்து வந்தது எல்லாம் அவளை சோர்வாக்கின. தன்னை அறியாமல் உறங்கிப்போனாள். எத்தனை நேரம் உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. அவளது மொபைல் அலறியதில் திடுகிட்டு எழுந்தாள். தனது கைப்பையினுள் அதனை தேடி எடுத்தாள்.

‘ஹலோ’ கண்னை முடிக்கொண்டே பேசினாள்.

‘என்னடி பண்ற. அதுக்குள்ள துங்கிடியா’ எதிர்முனை அதட்டியது.

நன்றாக கண்ணை விழித்துக் கொண்டு ‘அம்மா, தூங்கல மா. தூங்கி எழுந்துட்டேன். ஆறு மணிக்கே’ என்றாள்.

‘என்னடி சந்திய வேளைல. தனியா போய் ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள இப்படி ஆகிட்டியே ’ சத்தம் போட்டாள் அம்மா.

‘ஆரம்பிக்காதம்மா. டயர்டா இருந்தது. ஐஞ்சு நிமிஷம் படுத்துக்கலாம்னு நெனச்சேன். அப்படியே தூங்கிட்டேன். விடு பிளிஸ். தோ எழுந்துட்டேன்’ என்றபடி பெட்டை விட்டு எழுந்தாள்.

‘அப்பறம், போனதும் பெரிசா இடி விழுந்துதாமே. கேள்விப்பட்டேன்.’ கேட்டாள் அம்மா.

‘ஹா ஹா. ஆமாம்மா. நாங்க ரெண்டு பேருமே எதர்பாக்கல. ஆனா பிராப்ளம் ஏதும் வரும்னு தோணல.அப்பொ கதவ டமால்னது தான். இதுவர தறக்கல. அப்பாகிட்ட மட்டும் சொல்லாத’ என்றாள்.

‘நான் எங்க சொல்லறது. மாமி,நீங்க ரெண்டு பேரும் சுத்தம் பண்னது, கடைதெருக்கு போனு எல்லாம் சொன்னாங்க. அப்பா சரி பிராப்ளம் ஏதும் இல்லனு கொஞ்சம் கோவத்த கொறச்சிகிட்டாரு. அப்பறம் மாமியும் நானும் கிச்சன்ல பேசிகிட்டு இருந்தோம் உன்னோட என்றிய பத்தி. அப்பா அப்போ தண்ணி குடிக்க வந்திருக்காரு. எல்லாத்தையும் கேட்டுட்டாரு. அவ்வளோ தான். காலையோட இடி வெறும் பிஜி வெடி தான்கறா மாதிரி ஒரே சத்தம். அவன் யாரு என் பொண்ணுகிட்ட அப்படி பேசனு. அவர சாளிக்கறதுக்குள்ள ஒரு வழி ஆச்சு.’ கூறினாள் அம்மா.

‘ஆமாம் அவரோட பொண்ண அவர் தான் திட்டணும்’ முணுமுணுதாள்.

‘உன்னையும் திட்டினாரு. அவனுக்கு இருக்கற அறிவு இவளுக்கு எங்க போச்சுனு, ஒரே சத்தம். எல்லா பேரன்ட்ஸும் இப்படி தான்டி. விட்டு பிடிக்கவும் மாட்டோம், விட்டு கொடுக்கவும் மாட்டோம். நீ நாளைக்கு வீட்டுக்கு வந் ஆகணும்னு ஒரே குதி. வந்திடரையா? ’ அம்மா கேட்டாள்.

‘என்னமா சொல்லற.பர்ஸ்டு நாளே பாக் டு த பெவிலியனா? ’ சிணுங்கினாள்.

‘என்னடி பண்ண சொல்லற. எவன்கிட்டயோ திட்டு வாங்கவா நாங்க உன்ன பெத்தோம். கஷ்டமா இருக்குடி’ அம்மா வருத்தப்பட்டாள்.

‘நீ திட்டும் போது ஒரு தடவயாவது கஷ்டப்பட்டிருப்பியா? ’ சிரித்தாள்.

‘அது எங்க உரிமடீ. நீ நாளைக்கு வரியா இல்லயா, அத சொல்லு.’ அம்மா கண்டிப்பானாள்.

‘அம்மா ஒரு வாரம் டைம் கொடு. அதுக்குள்ள அவங்க சாரி கேக்கலைனா நான் வந்திடரேன். பிளீஸ் டைம் கொடுமா’ கெஞ்சினாள்.

ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு பதில் வந்தது. ‘சரி அடுத்த சன்டே பாக்கலாம்’

‘முடிவே பண்ணிடியாமா’ சோர்வாக கேட்டாள்.

அம்மா சிரித்தாள். ‘நீ அடுத்த சன்டே வரியோ இல்ல பிளான்படி ரெண்டு மாசத்துல வரியோ, உன் இஷ்டம் ஆனா நெக்ஸ்ட் டைம் திட்டு வாங்கிட்டு நிக்காத’

அம்மா முடிப்பதற்குள் கேட்டாள். ‘பளார்னு ஒண்ணு கொடுத்துட்ட்டுமா?’ சிரித்தபடி கேட்டாள்

‘அது உன் சாமர்தியம். பிராப்ளமே இல்லாம இருந்துப்பியோ, இல்ல அடிசிப்பிங்களோ. ஆனா ஒரு சின்ன பிராப்ளம்னாலும் அடுத்த நிமிஷம் நீ வீடுல இருக்கணும். புரியுதா. சரி, அதவிடு, சாப்டியா? ’ அம்மா கேட்டாள்.

‘இல்லமா இனிமேதான். தூங்கிடேன்ல. அம்மா, நம்ப மாட்ட இங்க பிரிட்ஜ் புல்லா வெரைடி வெரைடியா மாகி தான்மா’ பதிலளித்தாள்.

‘போச்சுடா. இதுதான் சாக்குனு 24மணி நேரமும் மாகில முழுகிடாத, கேட்டியா. சரி சாப்ட்டு தூங்கு. நாளைக்கு ஆபிஸ் போகணும்ல’ அம்மா அக்கறையானாள்.

‘சரிம்மா. நீ கவலபடாத. உனக்கே தெரியும்ல கொஞ்சம் பிராப்ளம்னாலும் நான் சொல்லவேண்டியத சொல்லிட்டு வந்துடுவேன். நீங்க ரெண்டு பேரும் பாத்துகோங்க. நாளைக்கு கால் பண்ணறேன். பை மா. ’ அம்மாவிடம் விடைபெற்றாள்.

மொபைலை அணைத்துவிட்டு முகம் கை-கால் அலம்பிக் கொண்டு கிழே இறங்கி பிள்ளையாரை கும்பிட்டாள். சமையலறைக்குள் நுழைந்து, பிரிட்ஜிலிருந்து மாகி டபுள் பாக்கெட்டை பிரித்து அடுப்பில் போட்டாள். வாசலில் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே எட்டிப் பார்த்தாள். சுரேஷ் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

‘வெளில போனதே தெரியலையே. நல்லா தூங்கிருக்கேன்.’ தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள். அவனும் அவளைப் பார்த்துவிட்டு நின்றான்.

அவன் ஆரம்பித்தான். ‘நீங்க இருக்கறது ஞாபகம் இல்லாம பூட்டிட்டு போயிடேன்.’ முடித்தான்.

‘ஓ’ என்றாள். அதற்குள் மாகி வாசனை வெளியே வரவே, சமையலறையை திரும்பி பார்த்து, ‘மாகி பண்ணிட்டு இருக்கேன், சாப்படறீங்களா’ என்று கேட்டாள்.

‘ஒரு நிமிஷம். பூட்டிடேன்கறதுனால கில்டியா பீல் பண்ணி பேசினேன். அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்லறேன். டோன்ட் டிஸ்டர்பு மீ. நான் உங்கள சமைக்க சொல்லலியே’ கோவமாக கேட்டான்.

‘நீங்க சொல்லல. ஆனா பிரிட்ஜிலேந்து தான் மாகி எடுத்திட்டேன். கடைக்கு போனப்போ மறந்துட்டேன். அதான் சேத்து செஞ்சேன்.’ தயங்கியபடி கூறினாள்.

‘அடுத்தவங்களது எடுக்கும் போது கேக்கணும்னு கூடவா தெரியாது.’ எகிறினான்.

‘கடைக்கு இப்ப போக ரொம்ப டயர்டா இருந்தது. இங்க ஸ்டாக் நெறய இருக்கேனு எடுத்தேன், உங்ககிட்ட சொல்லிக்கலாம்னு. ’

‘உங்க இஷ்டத்துக்கு ஏதும் நெனக்காதீங்க. இதுக்கு தான் யாரும் வேண்டாம்னு இருந்தேன், மாமி சதி செஞ்சுடாங்க. ’ குரலை உயர்தினான்.

‘உங்க பர்மிஷன் இல்லாம எடுத்தது தப்பு தான். சாரி, இப்பவே கடைக்கு போய் உங்க மாகிய ரீபிளேஸ் பண்ணிடறேன். ஆனா கத்தறதுனால ஒண்ணும் சாதிக்க முடியாது’ என்று அமைதியாக கூறிவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு மாடி ஏறினாள்.

‘நான் ரீபிளேஸ்மெண்ட் கேக்கல. ஆனா என் சம்மந்தபட்ட எந்த எல்லைகுள்ளும் யாரும் வரத நான் அனுமதிக்க மாட்டேன்.’ கூறிவிட்டு தன் கூட்டிற்குள் அடைந்து கொண்டான்

அவள் கீழிறங்கி வந்தாள். சமையலறை மேடையில் சாய்ந்து கொண்டு கண் மூடினாள். ‘எனக்கு தேவயில்லாத வேல. நல்லா வேணும் எனக்கு’ தன்னை நொந்தபடி மாகியை ஒரு தட்டில் கவிழ்த்க் கொண்டு ஸ்பூணுடன் டீவீ முன் சென்று அமர்ந்து அதனை ஆன் செய்தாள். டீவீ பார்த்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

‘இத்தன நாள்ல, இப்படி டேஸ்டே இல்லாம, மாகி இருந்ததே இல்ல’ என்றெண்ணியடி மாகியை முழுங்க ஆரம்பித்தாள்.
தொடரும்....

Thursday, March 19, 2009

ஒரு கதாசிரியரின் கதை - 3

பகுதி - 3 - சுரேஷ்


உள்ளே சென்ற மாமியும் அவளும் ஒரு நிமிடம் சுற்றிப் பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டனர். ‘மாமி, நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். நீங்க உக்காந்துகோங்க’ என்றாள்.
‘எங்க உக்கார. என் புடவ என்ன திட்டும், இதுல உக்காந்தா. நீ ஒட்டட அடிச்சு பெருக்கு, நான் இதெல்லாம் தொடச்சி வெக்கறேன். ’ மாமி ஐடியா தந்தாள்.

‘ஓகே மாமி. ஆனா முடியலேனா வெச்சுடுங்க, நான் பாத்துக்கறேன். இருங்க ஒரு டவல் கொண்டுவரேன். மூக்குல கட்டிக்கோங்க ’ என்றபடி படி ஏறினாள்.

‘சரிடீம்மா. நான், துடப்பமும் ஒட்டடகோலும் எடுத்து வெக்கறேன்’ என்றபடி மாமி தோட்டத்திற்கு சென்றாள்.

விரைவில் இருவரும், தத்தம் வேலையை செய்ய ஆரம்பித்தனர். இருபது நிமிடங்களில் ஒட்டடை வேலையை முடித்தாள். மாமி டீவீ, பிரிட்ஜ் எல்லாவற்றையும் மும்முரமாகத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

‘மாமி ஹெல்ப் வேணுமா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகோங்க’ என்றபடி மேடையில் அமர்ந்திருந்த ஸ்டவுடன் போராடிக்கொண்டிருந்த மாமியிடம் போய் நின்றாள்.

‘ஆ, கை வலிக்குது. அவனயும் ஹெல்புக்கு கூப்டுக்கலாம் நெனச்சென். ஆனா இப்போ பக்கத்துல கூட போக முடியாது. அக்சுலா சொல்லப்போனா, நீ இங்க தங்கப் போறேனு சொன்னதும் அவன் மண்டைய ஆட்டிட்டு அவன் ரூமுகுள்ள போய் அடஞ்சுகுவானு தான் நெனச்சேன். இப்படி குதிப்பான்னு நெனச்சுக்கூட பாக்கல.’ என்று மாமி கூறிக்கொண்டே தன் வலது கையை பிடித்துவிட்டுக்கொண்டாள்.

சிறிது மௌனத்திற்கு பிறகு, மாமி தொடர்ந்தாள். ‘அவன் காலேஜ் வரைக்கும் சோசல் டைப்பாதான் இருந்தான். அவனும் அவன் அம்மவும் தான். மைலாப்பூர்ல தான் இருந்தாங்க. அவன் சின்ன வயசுலுந்து அவன எனக்கு தெரியும்.
அவன் அம்மா ரொம்ப ஒண்ணும் படிக்கல. ஒரு மெடிக்கல் ஷாப்ல தான் வேல. ரொம்ப வருஷம் அங்க இருந்தா. அப்பறம் லாப் அஸிஸ்டண்டுக்கு படிச்சு அந்த மெடிகல் ஷாப்க்கு சொந்தமான லாபுக்கு இன்சார்ஜ் ஆனா.
ரொம்ப சின்ன வயசுலேயே அவன் அப்பா போயிட்டு. அம்மா தான் தனியா வளத்தா. அவங்களோட நெலமய சொல்லி வளத்ததால அவனும் அவள அநாவசிமா எதுக்கும் தொந்தரவு பண்ணதில்ல. காலைல பேப்பர் டெலிகதறல்வர் பண்ணி அவனும் அவனால முடிஞ்சத செஞ்சிட்டிருந்தான். அவங்க ரெண்டு பேரயும் ரிலாக்ஸுடா வெச்சிருத்தே அவனோட எழுத்துக்கள் தான்.
முக்காவாசி நேரம் அவன் தனியா இருந்ததால, அவன் அம்மா “நீ எத பக்கும் போதும் அத பத்ன உன் மனசுல தோன்றத எழுதி வையு. நான் வீட்டுக்கு வந்ததும் படிக்கறேன். ஸ்கூல நடந்தது பிரண்டு கூட நடந்தது எதுனாலும் எழுது” னு சொல்லிருந்தா. அப்போ எழுத ஆரம்பிசவன் தான். எழுதி எழுதி அவன் கற்பன திறன் வளந்தது. கத கவதனு எழுத ஆரம்பிச்சான்.
நைட் சாப்டும் போது அவன் எழுதினத ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணுவாங்க. அவ இவனோட காலே செகண்டு இயர்ல போய் சேந்துட்டா. இவன்கிட கடசியா கேட்டுக்கிட்டது - காலேஜ எப்படியும் முடிச்சுடு, எழுதறத என்னிக்கும் நிறுத்தாத – இது ரெண்டும் தான்.
லாப்ல இருந்ததால அவ நெலம அவளுக்கு முன்னமே தெரிஞ்சிருந்துது. ஒரு வருஷ வாடகய அட்வான்ஸா பே பண்ணிருந்தா. நம்பினா நம்பு, அவளோட கடசி காரியத்துக்காகர செலவு வர தனித்தனியா கவர் போட்டு வச்சிருந்தா. அத பாத்ததும் அவன் கதறின கதறல், எனக்கு இப்போ நெனச்சாலும் அழுக வருது.’ கண்ணை துடைத்துக்கொண்டாள் மாமி.
மாமி தொடர்ந்தாள். ‘அவன் பிரண்டு கார்தி தான் கூட முழுக்க முழுக்க இருந்தான். காலேஜுல லிடேரச்சர் படிச்சுகிட்டு இருந்லும், மாக்ஸ் நல்லா போடுவான். டியுசன் எடுது தன் செலவ பாத்துகிட்டிருந்தான். அந்த பசங்க கிட்ட ரெணடு மாச டியுசன் பீஸ் அட்வான்ஸா வாங்கி, அவ காரியத்த முடிசான். அவ எடுத்து வெச்சிருந்த கவர் இன்னி வரைக்கும் அவன் கிட்ட இருக்குனு நெனக்கறேன்.’ மாமி முடிக்கும் போது இருவரும் கண்ணீரோடு இருந்தனர்.
‘இன்னி வரைக்கும் கார்தி தான் அவன் பிரண்டு. கார்திக்கு ஒரு வார பத்திரிகையோட எடிட்டர தெரிஞ்சிருந்தது. இவன இன்ரொடியுஸ் பண்ணினான். இவனோட ஒரு பக்க கதை, சிறுகதை அவங்க பப்ளிஷ் பண்ணாங்க. டியுசன், கதை, பேப்பர் டெலிவரி இதுல வந்த பணத்த வச்சு எப்படியோ காலேஜ் முடிச்சான். ஸ்காலர்ஷிபும் இருந்ததால சுலபமாச்சு. அவன் எழுத்துகளு பிரபலமாச்சு.
காலேஜ் முடிச்சதும், ஒரு பப்ளிஷிங் கம்பெனி நாவல் எழுதி தர கேட்டுகிட்டாங்க. இவனும், சந்தோஷமா முடிச்சான். இவனோட இன்னோரு பிரண்டு தான் இவனுக்காக டைப் செஞ்சிட்ருந்தான், இவனுக்கு தெரியாததால. டெட்லைன்கு முன்னாடி நாள் அவனுக்கு போன் பண்ணி கேட்டா, அவன் என்னடான்னா, இன்னெரு பிரண்டு கூட படத்துக்கு போய்டானாம். என்னடா இப்படி பண்ணிடனு கேட்டா, “நான் உனக்கு ஹெல்பு தான் பண்ணறேன், நீ ஒண்ணும் எனக்கு சம்பளம் தரல”னு மூஞ்சுல அடிச்சுடானாம்.
இவனும் கார்தியும் போய் அந்த பையன்கிட்டேந்து, அவன் டைப் பண்ணி முடிச்ச வரைக்கும் போய் வாங்கிட்டு வந்து மீதிய கார்தி நைட் புல்லா உக்காந்து முடிச்சு தந்தானாம். கொண்டு போய் சப்மிட் பண்ணுக்கப்பறம் தான் ரெண்டு பேரும் வாய தெறந்தாங்களாம்.
இவன் கம்புயூட்டர் யூஸ் பண்ண பர்மிஷன் கேட்ருக்கான். ஆனா கார்தி, “நீனா கத்துகறத விட டைபிங் சென்டர்ல போய் கத்துகறது தான் நல்லது. தமிழ் டைபிங் அவ்வளோ இஸி இல்ல”னு அவன ஒரு இன்ஸ்டிடுட்ல சேத்தான். அங்க ஆறு மாசம் படிச்சான். இருந்த சேவிங்ச வெச்சு செகண்டு ஹாண்டு கம்பியுட்டர் வாங்கினான். அப்போலேந்து தான் இவன் இப்படி ஆனான். கிளாஸ், வீட்டுல டைபிங் பிராக்டிஸ் அப்பறம் கதை எழுதனும், எழுதினத டைப் செயணும், அவனே ப்ருப் ரீடிங்கும் பாக்க ஆரம்பிச்சான். இதெல்லாம் பண்ணிட்டு இருந்ததால வீட்டுலேயே கன்பைன் ஆகிட்டன். எல்லாரோடையும் கான்டாக்டு இல்லாம போச்சு. யாருமே வேண்டாம்னு ஆகிட்டான். இப்போ வெளில வர தெரியல.’ என்று மாமி முடிக்கும் போது சமையலறையும் குளித்திருந்தது.

‘அவனால உனக்கு ஒரு பிராப்ளமும் இருக்காது. இப்படி கத்தினாலும் நியூசன்ஸா இருக்க மாட்டான். அவன பத்தி அவ்வளோ தான்.’ என்றபடி பின் கழுத்தில் கையை வைத்து தலையை சுற்றிக்கொண்டு எக்ஸர்சைஸ் செய்தாள் மாமி.

தோட்டத்தில் இருவரும் முகம், கை-கால் அலம்பிக்கொண்டார்கள். ‘பக்கத்துல காபிடே இருக்கு. வா போய் காபி போடி வாங்கி வரலாம்’ மாமி அழைத்தாள்.

‘இல்ல மாமி, தெரு மொனைல கடை பாத்தேன். பால் பாக்கெட், புரு, சக்கர வாங்கி வரேன்.’ கூறிக்கொண்டே மாடி ஏறினாள், பர்ஸ் எடுத்துவர. வாங்கி கொண்டு வந்தாள். இருவரும் காபி குடித்து முடித்தனர். மாமி மணி பார்த்தாள். நான்கை தொட்டுக்கொண்டிருந்தது சின்ன முள்.

‘சரி நான் கெளம்பறேன். நீயும் என் கூட வா, ஏதாவது வாங்க வேண்டியிருந்தா’ மாமி அழைத்தாள்.

‘வாங்க ஏதும் இல்ல. ஆனா லோகேஷன் பாத்து வச்சுகறேன் – பஸ் ஸ்டாண்டு, கடை எல்லாம். வாங்க போகலாம்’ என்றாள். இருவரும் கதவை சாத்திக்கௌண்டு கிளம்பினர்.

Monday, March 16, 2009

ஒரு கதாசிரியரின் கதை - 2

2. வீடு


‘மாமி இந்த களேபரத்துல மறந்துட்டு போயிட்டாங்க. ம்ம்.. நாமளே பாத்துக்கலாம்’ என்றெண்ணிக் கொண்டே அவள் வாசல் கேட் அருகே சென்றாள்.


வாசல் கேட்டிற்கும் உள் கேட்டிற்கும் ஐந்து அடி இடைவெளி இருக்கும். நடுவே மட்டும் சிமிண்ட் தரை மூண்று அடிக்கு இருக்க, சுற்றிலும் மண்ணாக விடப்பட்டிருந்தது. தோட்டப்பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற வீடு என எண்ணினாள்.


அந்த சிமிண்ட் தரை அப்படியே வீட்டை சுற்றிக்கொண்டு சென்றது. உட்கார்ந்து வம்படிப்பதற்கு சிமிண்டிலான மேடை சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு படி ஏறினால் உள் கேட்டினுள் ஒரு சிறிய ரூம். அது ஒரு சிட் அவுட். அங்கே தான் இ.பி. மீட்டர், ஷூ ராக் இருந்தது. கிரிலும் ஜன்னலும் நல்ல காற்றையும் வெளிச்சத்தையம் தந்து கொண்டிருந்தது. கிரிலைப் பூட்டிக் கொண்டு உள்ளே சென்றாள்.


இதனைத் தாண்டியதும் மரக் கதவு. அதற்குப் பின்னால், ஒரு விஸ்தாரமான ஹால். ஹாலின் நடுவில் சோபா செட்டும் டீபாயும் இருந்தன. சுத்தம் என்ன என்பதை அறிந்து கொஞ்ச காலம் ஆகியது என்று அவை கூறிக் கொண்டிருந்தன. அதற்கு நேர் இடது புறம் ஒரு ரூம். சுரேஷ் ‘டமால்’ என்று கதவை அறைந்து கொண்டு போன ரூம். கதவைப் பார்த்த அவளுக்கு ‘DANGER 440V KEEPOUT’ என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது. புன்னகைத்தாள்.


அந்த ரூமிற்கு நேர் வலது புறம் தான் இவளது ரூமிற்கு போகக் கூடிய மாடிப்படிகள் இருந்தன. தனது ரூமை ஏற்கனவே கண்டிருந்ததால் சுரேஷின் ரூம் எப்படி இருக்கும் என்று அவளால் யூகிக்க முடிந்தது. மாடிப்படியின் அடியில் தான் டீவீ இருந்தது. அதுவும் தூசைப் போர்த்திக் கொண்டிருந்தது. டீபாயின் மேல் ரிமோட் கிடந்தது.


ஹாலைத் தாண்டிக் கொண்டு போனால் சமயலறை. மிகவும் காம்பாக்ட் ஆக இருந்தது. நுழைந்ததும் பிரிட்ஜ் இருந்தது. மற்ற பொருட்களுக்கு நான் சளைத்தவள் அல்ல என்றவாறு தூசு மண்டியிருந்தது. அதனை ஒட்டி பாத்திர செல்ப், அதனை ஒட்டி மேடை மற்றம் சிங்க். மேடையில் எண்ணை ஏறிய ஸ்டவ் ஒன்று ‘சும்மா தான் இருக்கேன்’ என்று உட்கார்ந்துக் கொண்டிருந்தது.


சமயலறையைத் தாண்டி தோட்டம். துளசி மாடம் ஒன்று துளசிச் செடி இல்லாமல் இருந்தது. கிணறு, மோட்டார், துணி துவைக்கும் கல் என சகல இத்தியாதிகளும் இருந்தன. தோட்டத்திலிருந்துப் பார்த்தால் வெளி கேட் தெரிந்தது.


திடீரென்று அவளுக்கு சில சந்தேகங்கள். பிரிட்ஜை திறந்து பார்த்தாள். மேகி ஹோல்-சேல் கடைக்குள் நுழைந்தது போலிருந்தது. மேகியின் அனைத்து வெரைட்டிகளும் உள்ளே இருந்தது. கதவை மூடிவிட்டு சுரேஷின் ரூமை நோக்கினாள். பெருமூச்சு விட்டாள். தானும் தற்போது தனியாக இருக்கிறோம், தானும் மேகி மேனியாக் ஆகிவிடுவோமோ என்று எண்ணினாள்.


அடுத்த சந்தேகத்தைத் தீர்க மீண்டும் ஹாலுக்கு வந்தாள். சற்றிப் பார்த்தாள். ஒரு ஷோகேஸ் தான் இருந்தது. ஆனால் காலியாக இருந்தது. அப்போ பூஜை அறை எங்கே? தேடினாள். சமயலறையை ஒட்டிய ஹாலின் சுவரில் ஒரு பிள்ளையார் படம் இருந்தது. ஓகோ இது தான் சாமி ரூம் போல என்று பிள்ளையாரின் முன் சென்று கை கூப்பினாள்.


எல்லாம் சரி, மிக முக்கியமான பாத்ரூம் எங்கே? தேடிக்கொண்டு அவசர அவசரமாகத் தோட்டத்தை அடைந்தாள். அங்கே வெறும் வாஷ்பேசின் தான் இருந்தது. ஆஹா எங்கே போயிற்று என்று தேடிக்கொண்டே தன் ரூமிற்கு ஓடினாள். அப்போது தான் பார்த்தாள். ரூமின் வலது மூலையில் ஒரு கதவு துணி உலர்த்தும் பல ராடுகளைக் கொண்ட துணி மாட்டிக்குப் பின்னால் இருந்தது. அதை நகர்த்திவிட்டு திறந்து பார்த்தாள். ‘அப்பாடா’ என்று நிம்மதியானாள். இடது மூலையின் கதவு சிறிய வராந்தாவை காட்டியது. ரூமை விட்டு வெளியே வந்ததும் படிகள் மேலும் நீண்டு மோட்டை மாடிக்கு அவளை அழைத்துச் சென்றது. மாடிக்குச் சென்று சற்றிலும் பார்த்துவிட்டு முன் கேட்டை பார்த்துக் கொண்டு சுவரில் உட்கார்ந்தாள்.


அப்போது மாமி ஸ்கூடியில் வந்திறங்கியதை கண்டு கீழே ஓடினாள். ‘நல்ல வேள மாமி, நீங்க பெல் அடிக்கறத்துக்குள்ள வந்தட்டேன். இல்லேனா ரெண்டு பேரும் செமத்தியா வாங்கி கட்டிட்டிருப்போம்’ என்று சிரித்துக் கொண்டே கதவைத் திறந்தாள்.

அவளை வெறுமையாகப் பார்த்விட்டு, ‘எப்பட இருந்தவன் இப்படி ஆகிட்டாங்கறத்துக்கு அவன் ஒரு நல்ல எக்ஸாம்பிள். நல்ல பையன்மா அவன். கூட யாரும் வேண்டாம்னு இருக்கன். அவ்வளோ தான். சரி அவன விடு. வீட காட்டறேன்னு ஓடிட்டேன். அதோட உன் ஒருத்தியால சுத்தம் பண்ண முடியாது. அதான் வந்தேன். வா போய் வேலய பாக்கலாம்’ என்றபடி இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

ஒரு கதாசிரியரின் கதை - 1

1.புது வரவு

டக்... டக் டக்.... டக் டக் டக்.... கம்பியூட்டரின் கீபோர்டை வேகமாகத் தட்டிக் கொண்டிருந்தான் சுரேஷ். இன்னும் இரண்டு நாட்களில் அவனது நாவலின் ஸ்கிரிப்டை எடிட்டரிடம் கொடுத்தாக வேண்டும். இன்னும் 50 பக்கங்கள் டைப் செய்ய வேண்டியிருந்தது.

சுரேஷ் கடந்த 5 ஆண்டுகளின் அயரா உழைப்பால் நாவல் உலக்த்தில் தனக்கென ஓர் இடத்தை ஸ்தாபித்திருந்தான். அவனது வயது, இரண்டு மாதங்களில் வரவிருக்கும் அக்டோபரில் 28 முடியும்.

க்ரைம், காதல், சமுதாயக் கதை – எல்லாப் பிரிவுகளிலும் அவன் எழுத்துக்கள் பிரபலம். அரை பக்கக் கதையிலிருந்து ஐந்நூறு பக்க நாவல் வரை எழுதியுள்ளான். தற்போது ‘அபிமானி’ என்ற குறுநாவலை எழுதி வருகிறான். அவனது விரல்கள் கீபோர்டின் மேல் நடனமாடிக் கொண்டிருந்தது.

டிங் டாங் ....

வாசலில் அழைப்பு மணி அந்த நாட்டியத்தை தடுத்தது. கண்ணை மூடிக்கொண்டு அரை நிமிடம் தாமதித்து மீண்டும் ஆரம்பித்தான்.

டிங் டாங் .... டிங் டாங் .... இம்முறை வேகமாக மணி அழைத்தது.

‘சே, எப்போ பாரு இது வேணுமா, அது வேணுமானு யாராவது வந்துகிட்டே இருக்காங்க’ என்று அலுத்துக்கொண்டே கதவை திறந்தான்.

‘ஓ மாமி நீங்களா, வாங்க. நான் யாரோ சேல்ஸ் ரெப்னு நெனச்சு கதவ தெறக்கல’ என்ற படி சோபாவில் தூசு தட்டினான்.

‘உக்காருங்க மாமி. 5 ஆந் தேதியா இன்னிக்கு. வாடக எடுத்துட்டு வரேன். ஒரு நிமிஷம்’ என்று உள்ளே போனான்.

‘இன்னிக்கு ஒண்ணாந் தேதி தான்டா’ என்று அவனுக்கு சொல்லிவிட்டு, ‘நீ உள்ள வாம்மா’ என்று வாசலை நோக்கிக் குரல் கொடுத்தாள்.

சுரேஷ் உள்ளிருந்து எட்டிப்பார்த்தான். வாசலில் ஒரு பெட்டியும் ஹண்டுபாக் உடணும் ஒரு பெண் உள்ளே வந்தாள். வெள்ளை குர்த்தாவும் நீல ஜீன்ஸும் அணிந்திருந்தாள். கூந்தலை சும்மா சுருட்டி ஒரு பெரிய கிளிப் ஒன்று போட்டிருந்தாள். அவளுக்கு சுமார் 25 வயதிருக்கும் என்று எண்ணினான்.

‘மாடில தான்மா உன் ரூம். வீடு புல்லி பர்னிஷ்டு தான். கிட்சன்ல பாத்திரங்கலிருந்து பிரிட்ஜு எல்லாமே இருக்கு. நீ தாராளமா யுஸ் பண்ணிக்கலாம். போய் பெட்டிய மாடில வச்சுட்டு வா, வீட்ட சுத்தி காட்டறேன்.’ என்ற மாமியின் முன்னால் சுரேஷ், முகத்தில் ஒரு பெரிய கேள்விக்குறியோடு போய் நின்றான்.

‘மாமி, ஒரு நிமஷம். என்ன சொல்லவரிங்க. எனக்கு புரியல. இவங்க யாரு?’ கேட்டான் சுரேஷ்.


‘இவ இந்நிலேந்து இங்க வாடகைக்கு இருக்கப் போறா. பேரு ..’ என்று சொல்ல வந்தவளை தடுத்தான் சுரேஷ்.



‘அப்போ நான் எங்க போக? என்ன மாமி இப்படி பண்ணறீங்க? ஒரு வார்த்த கூட என்கிட்ட சொல்லல. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்.’ மிக கோவமாகக் கத்தினான் சுரேஷ்.


மாமி அவனை ஓர் பார்வை பார்து விட்டு தரையைப் பார்த்து பெரு மூச்சு விட்டாள். ‘நிறுத்துடா. கத்தாத. உன்ன வெளிய போக சொன்னேனா? இவளும் உன்ன மாதிரி இந்த வீட்டுல வாடகைக்கு இருக்கப் போறா. உன்னோட வாடக செலவ கொறச்சிருக்கேன்டா, சந்தோஷப்படு.’ என்றாள்.


‘மாமி, வாடகை ஜாஸ்தி வேணும்னா சொல்லுங்க, நான் தரேன். ஆனா, இன்னொருதங்க இங்க வேண்டாம். அதுவும் ஒரு பொண்ணு கண்டிப்பா வேண்டாம். அவங்க பெமலி கூட இருப்பாங்களா?’ கேட்டான்.


‘இல்ல’ மாமி பதிலளித்தாள்.


‘அப்போ கண்டிப்பா நான் ஒத்துக்க மாட்டேன். எப்படி மாமி ஒரு பொண்ண இங்க தனியா விடுவீங்க?’ எரிந்து விழுந்தான்.

‘அவ என்னோட ப்ரெண்டோட பொண்ணுடா. வீட்டுல ஒரு பிரச்சன. கொஞ்ச நாள் தனியா இருக்கலாம்னு வந்திருக்கா. தெரிஞ்சவங்க வீடுனா சவுகரியமா இருக்கும்னு நான் தான் இங்க வர சொன்னேன். இரண்டு மூணு மாசத்துக்கு தான்.’ மாமி விளக்கினாள்.


‘மாமி என்னோட பிரைவசிய என்னால விட்டுக்கொடுக்க முடியாது. யாரும் பக்கத்துல வேண்டாம்னு தானே ஒரு அசிஸ்டெண்டு கூட நான் வெச்சிக்கலை. நான் யாரையும் இந்த வீட்டுல அலோ பண்ண மாட்டேன்.’ விவாதித்தான் சுரேஷ்.


‘முணு காரணம் சொல்ல முடியும், அவ இங்க இருக்க.
1. உன் பிரைவசி ஒண்ணும் கெடாதுடா. நீ அந்த ரூம்குள்ள போய்டினா, வெளய இடியே விழுந்தாலும் உனக்கு தெரியப் போறதில்ல. அவ மாடில தான் இருக்கப் போறா. உனக்கும் கிட்சனுக்கும் சம்பந்தமே கெடயாது.
2. செகென்டா, வீட்ட எப்படி வைச்சிட்டிருக்க பாரு. வேலகாரி கூட நீ அந்த ரூம்லேந்து வெளிய வரமாட்டேனு நல்ல டிமிக்கி கொடுத்துட்டு சம்பளம் மட்டும் வாங்கிட்டு போறா. என்னால மாசா மாசம் மயிலாப்பூர்லேந்து மடிபாக்கத்துக்கு வந்துட்டு போக முடியாது. அவ இங்க இருந்தா வீடு வீடா இருக்கும்.
3. மூணாவதா, போன வாரம் பொண்ணு பாக்கறதா இருந்ததுல, சீக்கரம் கல்யாணம் முடிஞ்சிடும்னு நெனச்சேன். ஆனா நீ பொண்ணு பாக்கக்கூட போகல.’
- மாமி சொல்லி முடித்தாள்.


‘மாமி, பொண்ண போய் பாக்காதது என் தப்பு தான். என்னோட இருவது வயசுல அம்மா போனதுலேந்து தனியா இருக்கேன். தனியாவே பழகிட்டேன். கூட யாராவது இருந்தா அன்கம்பர்டபுளா இருக்கு. நீங்க சொன்னப்போ என்ன மாத்திக்கலாம்னு நெனச்சேன். ஆனா கடசீல முடியல. அதனால அவங்களுக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டுகிட்டேன். இப்போ திடீர்னு யாரயோ கூட்டிட்டு வந்து இங்க தங்க வெச்சா எனக்கு சபகேட்டிங்கா இருக்கும். ப்ளீஸ் மாமி, வேண்டாமே. ரொம்ப ப்ளீஸ்’ கெஞ்சினான் சுரேஷ்.


‘இந்த ரீசன நெறயவே கேட்டுட்டேன். அவ இங்க தான் இருக்கப் போறா. நீ உன் ரூமுக்குப் போய் பூட்டிக்கோ. அவ்வளோ தான். இது தான் பைனல். அவள இங்கிருந்து என்னால அனுப்ப முடியாது.’ என்றாள் மாமி தீர்மானமாக.





இவர்களது விவாதத்தை கேட்டபடி படியில் நின்றிருந்தாள் அந்த பெண். மாமியின் அருகில் வந்தாள். ‘நீ இங்க இருக்கலாம்மா. இவன் சுரேஷ். பெரிய எழுத்தாளன். பேசினது கேட்டல. ரெண்டு பேரும் ஒரு பிராப்ளம் இல்லாம கம்பர்டபுளா இருந்துகோங்க. நீ எப்ப வேணாலும் எனக்கு கால் பண்ணு ஓகேவா.’ என்று அவனை அவளிடம் அறிமுகப்படுத்தினாள்.


‘ஹலோ என் பேரு ....’ சொல்லவந்தவளை கோவமாக முறைத்து விட்டு ‘எதுவா இருந்தாலும் எனக்கு தேவயில்லாத விஷயம். எக்காரணத்தக்கொண்டும் என் ரூம் கிட்ட வராதீங்க’ பொரிந்துவிட்டு தன் அறையில் அடைந்துக் கொண்டான்.


மாமி அவளை பாவமாகப் பார்த்தாள். ‘கவல படாதீங்க மாமி. ஓரளவுக்கு இத எதிர்பார்த்து தான் வந்தேன். நீங்க அப்பா அம்மாவ பாத்துக்கோங்க. நான் டெய்லி கால் பண்ணறேன்னு சொல்லுங்க.’ என்றாள் அந்தப் பெண்.


அவள் முடிப்பதற்கு முன் மாமி அவனது கதவை தட்டி, ‘டேய் இவ உன்னோட நல்ல ரசிகைடா. இப்படி ஒரு பர்ஸ்ட் இம்பிரஷன் தந்திருக்கியே. அவளுக்கு ஏதாவது பிராப்ளம்னு கேள்விப்பட்டேன், நீ அவ்வளோ தான். தெரிஞ்சிக்கோ.’ என்று கூறிவிட்டு அந்தப் பெண்ணிடம் விடைப்பெற்றுக் கொண்டு தனது ஸ்கூடியில் பறந்தாள் ராதா மாமி.